புதிய ஆண்டில் புதிய எண்ணங்களுடன் வண்ணமயமான சந்தோசம் நிறைந்த வாழ்க்கைக்காக அடியெடுத்துவைப்போம்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எனது அன்பிற்கினிய அனைத்து மக்களுக்கும் 2017 ஆம் ஆண்டு சந்தோஷமும், சமாதானமும், அன்போடு கூடிய ஒற்றுமையுள்ள வளமான நல்ல ஆண்டாக அமைய என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்…

கடந்துவந்த 2016 ஆம் ஆண்டிலே நடந்த நல்லதையும் தீயதையும் எண்ணிப்பார்த்து நமது குறைவுகளை நிவர்த்தி செய்து, மலர்ந்துள்ள புதிய ஆண்டை வரவேற்பதோடு, கடந்த ஆண்டு முழுவதும் நமக்கு உதவிய கடவுளுக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் கூறிக்கொண்டு, மலர்ந்துள்ள இந்த ஆண்டு புதிய எண்ணங்கள், புதிய முயற்சிகள் நல்ல சிந்தனைகள் என்பனவற்றால் ஒரு உயிரூட்டமுள்ள விசேட ஆண்டாக நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் அமைந்திடவும், இலங்கை முழுவதும் பிரகாசமான சந்தோசம் நிறைந்த சுபீட்ஷமான வாழ்வு மக்களுக்கு கிடைத்திடவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து… நம்மால் முடிந்தவரை எல்லோரையும் நேசித்து இன, மத, சாதி பேதமின்றி எல்லோருக்கும் உதவி செய்வோம் வாழும் காலம் முழுவதும் எல்லா மக்களையும் நேசிப்போம்… இந்த நல்ல நாளிலே நல்ல சிந்தனையோடு என் உள்ளம் நிறைந்த நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்
உங்கள்
பா.டெனிஸ்வரன்
அமைச்சர் வடக்கு மாகாணம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*