முதலமைச்சராக உள்ள சசிகலாவின் முதல் கையெழுத்து இதுதானாம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

sasi-signature

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்பார் எனவும் மக்கள் நம்பிக்கையை பெறும் வகையில் டாஸ்மாக் கடைகளை மூடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சசிகலா நாளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ள நிலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றுள்ளது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவை சட்டமன்ற அதிமுக தலைவராக தேரிவு செய்து முதல்வராக பதவியேற்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை சசிகலாவிடம் கொடுத்து அதன் பின்னர் அவர் முறைப்படி முதல்வராக பதவியேற்பார் என அதிமுகவினர் கூறுகின்றனர்.

மேலும் முதல்வராக பதவியேற்ற உடன் மக்கள் நம்பிக்கையை பெற முதல் கையெழுத்தாக டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கோப்பில் சசிகலா கையெழுத்திடுவார் எனவும் தற்போது முதலமைச்சராக செயல்பட்டுவரும் ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சராக தொடர்வார் எனவும் பேசப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit