மாத்தறையில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்களில் இருவர் பலி..!

பிறப்பு : - இறப்பு :

மாத்தறை புதிய தங்காலை மற்றும் ஹிக்கடுவ ஆகிய இடங்களில் ஏற்பட்ட இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை, புதிய தங்காலை தொழில் பயிற்சி நிலையத்திற்கு முன்னால், லொறியொன்று மிதி வண்டியுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளவர் மாத்தறை நுபேவெல பிரதேசத்தை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஹிக்கடுவ – பத்தேகம வீதியில் ஆராச்சி கந்த வைத்தியசாலைக்கு அருகில் ஜீப் வண்டி ஒன்று மின் கம்பம் ஒன்றில் மோதியத்தில் அந்த வண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் காலி கித்துலன்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான நபர் என ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit