ஜெயலலிதாவின் உடல் ஏன் எரியூட்டப்படவில்லை…? தமிழச்சியின் அடுத்த ஆதாரம்….!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க வினரின் அதிகார மையத்திற்குள் சசிகலாவின் ஒத்துழைப்புடன் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட “தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் இறுதிச் சடங்கில் ஏன் எரியூட்டப்படவில்லை” என்பதை குறித்து நான் அனுமானித்த விஷயம்:

ஜெயலலிதாவின் உடல் எரியூட்டப்பட்டால் தடயங்கள் அழியக்கூடும். குறிப்பாக ஜெயலலிதாவின் உடைந்த பற்கள், வெட்டப்பட்ட கால்கள் அடையாளம் காணப்பட முடியாத அளவில் எரிந்து சாம்பலாகி இருக்கும். அதை ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க விரும்பவில்லை.

“சசிகலா / மன்னார்குடி கூட்டணியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், ஜெயலலிதாவின் உடல் எரியூட்டக்கூடாது. பிணத்தை வைத்து அச்சுறுத்தி அதிமுகவை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவும் ஜெயலலிதா உடலை எரியூட்டாதது காரணமாக இருக்கக்கூடும்” என்று யூகித்திருந்தேன்.

இன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வமான பொதுச் செயலாளராக சசிகலா அறிவிக்கப்பட்ட தினத்தில் மற்றொரு அறிவிப்பும் எனது யூகத்தை உறுதிப்படுத்துகிறது.

“நான் வழக்கை தொடர்ந்து விசாரித்தால் அது வேறு மாதிரி இருக்கும். ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பேன்” என்கிறார் உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன்.

இது சசிகலாவிற்கு விடப்படும் மிரட்டல்.

காந்தியை சாகடித்த ஆர்.எஸ்.எஸ் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்துக் கொண்டிருந்த போது, “காந்தி படுகொலை வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ரெயிலில் கொண்டு செல்லப்பட்ட போது காணாமல் போய்விட்டது” என்று கூற வைத்து அத்தோடு வழக்கையும் மூடிவிட்டது.

தோழர் அம்பேத்கர் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்தமதம் மாறிய 6வது மாதத்தில் இதே ஆர்.எஸ்.எஸ் ஆல் மர்மமான முறையில் மரணமடைய காரணமானது.

அம்பேத்கரின் மூத்த மகன் “என் தந்தையின் மர்மச் சாவிற்கு நீதி வேண்டும்” என்று பாராளுமன்றம் முன்பாக தன்னந்தனியாக கத்திக்கதறி நியாயம் கோரிய போது, காவிகளால் விரட்டியடிக்கப்பட்டார்.

இந்தியாவிற்கு விடுதலை வாங்கித் தந்த காந்திக்கும், இந்தியாவிற்கு அரசியல் சாசனத்தை எழுதிய அம்பேத்கருக்குமே இந்த கதி (?) என்றால்…

இந்த இருவருக்கும் முன் ஜெயலலிதா ஒன்றுமில்லைதான்.

ஆனால் ஜெயலலிதா ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நிலையில் கொல்லப்பட்டு அவருடைய உடலை திட்டமிட்ட காரணங்களுக்காக எரிக்காமல் வைத்துக் கொண்டு அவப்போது “ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து உடற்கூறு செய்து விசாரிக்க உத்தரவிடுவோம்” என்று நீதிபதிகளை விட்டு சசிகலாவிற்கு மிரட்டல் விடும் வேலைகளை ஆர்.எஸ்.எஸ் தொடரும்.

ஒருவேளை சர்வதேச நீதிமன்றம், “ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிடுமானால் காந்தின் ஆவணங்கள் தொலைந்தது போல் ஜெயலலிதாவின் உடலும் சமாதியில் இருந்தே காணாமல் போய்விடும்.”

அதுதான் ஆர்.எஸ்.எஸ் அரசியல்.

இந்த அரசியலை புரிந்து கொள்ளாதவரை இந்தியாவிற்குள் மாநில / மத்திய அரசை மீறி எந்த நீதிபதியாலும் ஒரு மயிரைக்கூட பிடுங்க முடியாது!

இது இந்திய சட்டத்திற்கு கிடைத்த சாபக்கேடு!!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*