சந்திரனின் இருண்ட பகுதியில் உயிரினமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பூமியின் துணைக் கோளான சந்திரனில் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தப்படாத பிரதேசத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள சீனா தீர்மானித்துள்ளது.

சந்திரனில் குறித்த பிரதேசத்தில் ஆய்வுகளை நடத்துவதற்கான விண்கலத்தை 2018 ஆம் ஆண்டு ஆரம்பித்தில் சந்திரனுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக சீனா நேற்று அறிவித்துள்ளது.

சீனா ஆய்வுகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ள பகுதியில் இதுவரை எந்த நாடும் ஆய்வுகளை மேற்கொண்டதில்லை.

அமைதியான நோக்கத்திற்காக இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளதுடன் விண்வெளி ஆராய்ச்சியில் பலத்தை அதிகரித்து கொள்ள சீனா எதிர்பார்த்துள்ளது.

இதனிடையே 2020 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் ஒன்றை அனுப்பி வைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

இதனடிப்படையில், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை தாண்டி சீனா விண்வெளி போட்டியில் முன்னோக்கி செல்லக் கூடும் எனக் கூறப்படுகிறது.

சந்திரனில் இருண்டு காணப்படும் பகுதியில் இரகசியமான உயிரினம் இருக்கலாம் என விண்வெளி ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

இதன் காரணமாகவே சீனா, சந்திரனின் இருண்ட பகுதியில் தனது ஆய்வை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தியிருப்பதாக ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*