வவுனியாவில் மண் கடத்தல் முறியடிப்பு..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவுனியாவில் மல்லாவி, ஐயன்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மண்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழிமூல தொலைபேசி பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டால் குறித்த மண்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (27.12) செவ்வாய்கிழமை வவுனியா பிரதி பொலிஸ் அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியிருந்தனர்.

இதனையத்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் அனுமதி பெறாது சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தினை மண் நிரப்பப்பட்ட நிலையில் கைப்பற்றியதுடன், அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதேவேளை, கடந்த 15 ஆம் திகதி மன்னார், சிலாபத்துறை பகுதியில் சட்டவிரோதமாக மண் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் தமிழ் மொழி மூல தொலைபேசி பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த மண் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமது பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகள், குழு மோதல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் மொழி மூல முறைப்பாடுகளுக்காக 0766224949, 0766226363 ஆகிய இலக்கங்களக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*