மது போதையில் நீராடிய குடும்பஸ்தர் கடலில் மூழ்கி உயிரிழப்பு.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடல்பரப்பில் மது போதையில் நீராடிய குடும்பஸ்தர் ஒருவர், புதன்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் கொண்டு வருவதாக, மனைவியிடம் கூறிவிட்டுச் சென்ற குறித்த நபர், அளவுக்கதிகமான மதுபோதை காரணமாக, கடற்கரையிலிருந்து 200 மீற்றருக்கும் அதிகமான தூரம் நீந்துச் சென்று நீராடிய போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், சம்பூர் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை வரதகுணராசா (வயது 50) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு உடன் விரைந்து சென்ற மூதூர் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.நூறுல்லா, குறித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக அறிக்கை வழங்கி, சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*