உலக மக்களை கவர்ந்த கறுப்பு அழகி.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

black-buarty

அழகு என்ற வார்த்தை பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

நடை அழகு, உடை அழகு, ஆபரண அழகு என வரிசைபடுத்திக்கொண்டே போகலாம். ஆனால் ஒரு பெண்ணுக்கு அழகு என்பது எந்த அளவுக்கு முக்கியமோ அதே போன்ற அப்பெண் அழகில்லை என்றால் இந்த சமூகத்தில் சில எதிர்மறையான கருத்துக்களையும் சந்திக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறாள்.

இதில் முதலாவதாக முன்வைக்கப்படுவது தோல் நிறம் தான். நல்ல எலுமிச்சை நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் இருந்தால் தான் அழகு, கறுப்பு என்றால் அழகு இல்லை என்று விமர்சிக்கப்படுகிறார்கள்.

ஆனால் அந்த கறுப்பில் மறைந்திருக்கும் லட்சணம் பல பேருக்கு தெரிவதில்லை. இப்படி தோல் நிறத்தினை பெரிதாக எடுத்துக்கொள்ளமால் கலைத்துறை மற்றும் மொடலிங் துறையில் சாதனை படைத்தவர்கள் ஏராளம்.

இதற்கு உதாரணமான சம்பவம் இதோ,

19 வயதான Khoudia Diop – யின் தோல் நிறம் நிலக்கரி நிறத்தில் இருக்கும். இதனால் தனது பள்ளி மாணவர்கள் முன்னிலையில் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியுள்ளார்.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டாலும், தனது தோல் நிறத்தை வைத்தே மொடலிங் துறையில் தற்போது சாதித்துக்காட்டியுள்ளார்.

Diop தற்போது பள்ளியில் படித்து வந்தாலும், இவரின் தோல் நிறத்தை பார்த்த மொடலிங் நிறுவனம் ஒன்று மொடலிங்காக இவரை ஒப்பந்தம் செய்தது. கடந்த 3 வருடங்களாக மொடலிங் துறையில் கலக்கி வருகிறார் Diop.

மற்றவர்கள் தனது தோல் நிறத்தை கிண்டல் செய்தாலும், எனது அழகை அதிகம் நேசிக்க கற்றுக்கொண்டேன், மற்றவர்கள் கூறும் எதிர்மறையான வார்த்தைகளை ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.

அதனால் தான் என்னால் இவ்வாறு சாதிக்க முடிந்தது என Diop கூறியுள்ளார். நிலக்கரி நிற தோல் மூலம் உலக மக்களை கவர்ந்த இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 250,000 பேர் பின் தொடர்கிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit