இன்னுமோர் உலகமும் சிந்திக்கும் உயிரினமும்..! யார் இவர்கள்…?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆபத்து மிக்க பிரபஞ்சத்தில் பல ஆபத்துகளில் இருந்து தப்பிப் பிழைத்து எதிர் பாராத விதமாக பூமியில் தோன்றிய உயிர்களில் ஒன்றே நாம் அதாவது மனிதர்கள்.

இங்கு முக்கியமானது ஒன்றில் இருந்து ஒன்று பாதுகாத்துக் கொள்வதே அதுவே தக்கன பிழைத்தல். அதாவது எதிர்ப்புகளில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே நிலைத்து வாழ முடியும். பூமியில் உயிரினங்கள் நிலைக்க இதுவே காரணம்.

இதே நிலை தான் வேற்று உலகங்களிலும் நடைபெறுகின்றன. பூமியில் மட்டுமல்ல முழுப்பிரபஞ்சத்திலும் இது நடைபெறுகின்றன என உறுதியுடன் கூறுகின்றார் ஸ்டீபன் ஹாக்கிங் எனப்படும் உலகின் தலை சிறந்த விஞ்ஞானி.

பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு அடிப்படை நீர், காற்று என்பதே. இது பூமி வாழ் உயிரினங்களுக்கு தான் முழு பிரபஞ்சத்திற்கும் இது பொதுவல்ல.

சூரிய குடும்பத்தில் வேறு கிரகங்களில் நீர் இருக்கலாம், ஏன் எமக்கு அருகே உள்ள செவ்வாயில் நீர் இருக்கின்றது ஆனால் அது உறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

ஆதாரங்கள் பல இதற்காக கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்டீபன் ஹாக்கிங் தேடல் படி வேற்றுக்கிரகவாசிகள் என்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நிச்சயம் நம்மை போல நம் உயிரினங்களை போல இருக்க வேண்டும் என்ற அடிப்படை இல்லை.

அதே போன்று நீரையும் காற்றையும் அடிப்படையாகக் கொண்டு அண்டத்தில் உள்ள உயிரினங்கள் வாழத் தேவையில்லை அவற்றிக்கு தக்கன பிழைத்தல் கொள்கை படி வேறு ஒன்று அடிப்படையாக இருக்கும்.

இதன் படியே நீரை மூலப்பொருளாக கொள்ளாமல் நைற்றஜன் (வாயு) வை அடிப்படையாக கொண்டு உயிர் வாழும் உயிரினங்கள் கூட கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பூமியில் அது வாயுவாக இருக்கின்றது, ஆனால் 320 பாகையில் அது நீரே. அவ்வாறாக நைற்றஜன் கடல்கள் நம் பிரபஞ்சத்தில் இருக்கலாம் அதனை அடிப்படையாக கொண்டு உயிரினங்கள் வாழ முடியும் என்பதே விஞ்ஞானிகளின் வாதம்.

அவ்வாறான உயிரினங்கள் இருந்தால் எமக்கு எந்த விதமான கவலையும் இல்லை நிச்சயமாக இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் மனிதனைப் போல சிந்திப்பார்களா?

அப்படி சிந்திக்கும் திறன் படைத்தவர்கள் என்றால் நிச்சயம் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவார்கள் அதனால் அபாயமே.

ஒரே இரத்தம் கொண்ட பூமிக்குள்ளேயே இத்தனை கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் இருக்கும் போது எப்படி இருப்பார்கள் என்று கூட தெரியாத மற்றுமோர் உயிரினங்களால் ஆபத்து மட்டுமே என்பது நிச்சயம்.

பூமியில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதாகவும் அவர்கள் தொழில் நுட்பத்தில் சிறப்பு வாய்ந்தவர்களாகவே இருப்பார்கள் என்று விஞ்ஞானிகள் அச்சம் கொண்டிருக்கின்றார்கள்.

அதனாலேயே பூமிவாசிகள் அவர்களை கண்டு பிடிக்கும் தேடல்களில் பணத்தை வாரி இறைக்கின்றார்கள். நினைத்தும் பார்க்க முடியாத அளவு பணம் இதற்காக செலவு செய்யப்படுகின்றது.

இந்த பணத்தை கொண்டு முழு உலக மக்களையும் கூட பணக்காரர்களாக மாற்றி விட முடியும் ஆனால் செய்யமாட்டார்கள், தான் வாழவேண்டுமே.

1997ஆம் வருடம் ஓர் செய்மதி மூலம் ஓர் செய்தி கிடைத்தது, இது வேற்றுகிரகத்தில் இருந்து வந்த செய்தியே. அது வேற்றுக்கிரகம் தொடர்பில் உறுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆதாரம் எந்த விஞ்ஞானியும் இன்று வரை இதனை மறுக்கவில்லை.

இந்த மர்மம் பற்றிய உண்மை நாசாவிற்கு நன்றாக தெரியும் ஆனாலும் மறைத்து வருகின்றது. ஒரு சில நாடுகளும் கூட இதனையே கடைபிடிக்கின்றது.

எவ்வாறாயினும் வேறு உலகங்கள் இருக்கின்றன, அவர்கள் எம்மை நோட்டமிடுகின்றார்கள் என நம்பும் ஸ்டீபன் ஹாக்கிங் தான் இப்போது அதனை கண்டு பிடித்து விடும் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வகையில் எம்மை நோட்டமிடும் அந்த மர்ம உயிரனங்கள் யார்? எங்குள்ளது அந்த இன்னுமோர் உலகம்? 2017இல் பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கின்றது என்கின்றார்கள் பலர்.

அதன் படி எம்மைபோல சிந்திக்கும் இன்னுமோர் உலகம் தேடல் பயணம் அதி வேகமாக முன்னெடுக்கப்பட்டு கொண்டே வருகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*