பண்டிகைக் காலங்களில் கனக் கச்சிதமான முக அழகுக்கு கலக்கலான குறிப்புகள்!!

பிறப்பு : - இறப்பு :

கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து ரசிக்காதவர்கள் யார் தான் இருக்கிறார்கள்? அப்படிப் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, தன் முகம் அழகாகவும் லட்சணமாகவும் இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள்.

நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அடுத்தடுத்து பண்டிகைக் காலங்கள் வந்து கொண்டிருக்கின்றன. நிறைய உறவினர்களையும், நண்பர்களையும், அன்பானவர்களையும் சந்திக்கப் போகிறீர்கள். கொஞ்சம் முகத்தை அழகாக நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டாமா?

அது அவ்வளவு எளிது கிடையாது; அதே நேரத்தில், அது அவ்வளவு கஷ்டமும் கிடையாது. முகத்தைப் பொலிவாக வைத்திருக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கி, அதற்கான முயற்சிகளையும் சிறிது எடுத்துக் கொண்டால் போதும்.

இந்தப் பண்டிகைக் காலங்களில் முகத்தைக் கனக் கச்சிதமாக வைத்திருக்க இதோ சில எளிய குறிப்புகள்…

பருத் தழும்புகளை நீக்க…

சந்தனம், பாதாம், தேன் மற்றும் தயிர் ஆகியவற்றைக் கலந்து, அந்தப் பேஸ்ட்டை தினமும் முகத்திலும் கழுத்திலும் தேய்த்து, சுமார் 10 நிமிடங்கள் கழித்து நன்றாகக் கழுவ வேண்டும்.

புருவங்களை ஷேப் செய்ய…

முக அழகுக்கு மிகவும் முக்கியம் புருவத்தை அழகாக வைத்திருப்பது தான். ஒரு நல்ல பியூட்டீசியனை நாடுங்கள். உங்கள் புருவங்களை அழகாக ஷேப் செய்து கொள்ளுங்கள். தீபிகா படுகோன், அலியா பட் ஆகியோரின் புருவங்களுக்கு இணையாக உங்கள் புருவங்களையும் திருத்திக் கொள்ளுங்கள்.

பளிச் முகத்திற்கு…

தயிர் மற்றும் தேனுடன் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து முகத்தில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள். கழுவும் போது வட்ட வடிவில் தேய்த்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தை மிருதுவாக்க…

பாதாம் மற்றும் பழுத்த பப்பாளி கலந்த பேஸ்ட்டை முகத்தில் நன்றாகத் தடவி, சுமார் 20 நிமிடங்கள் வரை ரிலாக்ஸாகப் படுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர், முகத்தை நன்றாகக் குழாய் நீரில் கழுவினால், முகம் மிருதுவாகும்.

மென்மையான உதடுகளுக்கு…

ஃப்ரெஷ்ஷான பால் க்ரீமை உதடுகளில் ஒரு சாஃப்ட் பிரஷ்ஷின் உதவியுடன் வட்ட வடிவில் பூசித் தடவ வேண்டும். பின், ஒரு நிமிடம் கழித்து, பன்னீர் கொண்டு கழுவ வேண்டும்.

முகத்தில் முடிகளைக் குறைக்க…

கடலை மாவு, சிறிது மஞ்சள் மற்றும் தயிர் ஆகியவை கலந்த பேஸ்ட்டை தடவி, அது நன்றாகக் காய்ந்ததும், வட்ட வடிவில் கழுவ வேண்டும். தினமும் இதைச் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

முகத் துளைகள் குறைய…

முட்டையின் வெள்ளைக் கரு, தக்காளி மற்றும் பாதாம் ஆகியவற்றின் கலவையை முகத்தில் தடவுங்கள். சுமார் 10 நிமிடங்களுக்குப் பின், நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.

மூக்கு பளபளக்க…

மைசூர் பருப்பை ஒரு மணிநேரம் நன்றாக ஊற வைத்து, பின் அதைப் பேஸ்ட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தப் பேஸ்ட்டை மூக்கில் தடவி, அப்படியே 10 நிமிடங்கள் வரை விட்டுவிட வேண்டும். பின் ஒரு நிமிடத்திற்கு அதை நன்றாகத் தேய்த்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

பளபளப்பான முடிக்கு…

தலை முடிக்கு டை அடிக்கும் முன், முடியில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவ வேண்டும். இதனால் உங்கள் நெற்றியில் தேவையில்லாமல் டையினால் ஏற்படும் கறைகளைத் தவிர்க்கலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit