2016-ல் இந்தியாவை அசத்திய பெண்கள் இவர்கள் தான்!

பிறப்பு : - இறப்பு :

top-girlsof-2016

2017ம் ஆண்டை வரவேற்கவுள்ள நிலையில் 2016ல் நடந்த சுவாரசியமான விடயங்களை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் 2016ல் சாதனை படைத்த இந்திய பெண்கள் பற்றி இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

தீபிகா படுகோனே (Deepika Padukone)

பாலிவுட் உலகை கலக்கி வரும் தீபிகா படுகோனே மிகச் சிறந்த விளம்பர மொடலும் ஆவார். ஹாலிவுட் படத்திலும் அறிமுகமாகி உலகையே கலக்கி வருகிறார், உலகளவில் நடிகைகள் சம்பளத்தை பொறுத்த வரையில் இவர் தான் டாப்.

பி.வி. சிந்து (P.V. Sindhu)

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சிந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.

இவர் தன்னுடைய சிறு வயதிலேயே பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுஷ்மா சுவராஜ் (Sushma Swaraj)
இந்தியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ், மத்திய அரசில் தனக்கென்று ஒரு செல்வாக்குடன் இருந்தவருக்கு சிறுநீரகம் செயழிந்தது.
இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 10ம் திகதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா (Priyanka Chopra)

பிரியங்கா சோப்ரா ஒரு பிரபலமான பாலிவுட் நடிகை, இவரின் வாழ்க்கைப் பயணம் சண்டிகரில் இருந்து தொடங்கியது.

இவர் தற்போது Quantico என்ற ஹாலிவுட் சீரியலிலும், “Baywatch” என்ற படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றார்.

சந்தா கோச்சார் (Chanda Kochar)

சந்தா கோச்சார் என்பவர் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரியாக ஆக பதவி வகிக்கிறார்.

போர்ப்ஸ் பத்திரிக்கையின் ஆசியாவின் மிகச்சிறந்த தொழிலதிபர்கள் பட்டியலில் 22வது இடத்தில் உள்ளார்.

தீபா மாலிக் (Deepa Mallik)

பாராலிம்பிக் விளையாட்டில் முதன்முறையாக இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்று கொடுத்த பெண்மணி. தனது 42 ஆவது வயதில் 2012-ல் அர்ஜீனா விருது வாங்கியவர்.

சானியா மிர்சா (Sania Mirza)

சானியா மிர்சா இந்தியாவின் மிகச் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்ம ஸ்ரீ போன்ற விருதை பெற்ற சானியா, இந்த ஆண்டு பத்ம பூஷன் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சாக்ஷி மாலிக் (Sakshi Mallik)

இந்தியாவின் மிகச் சிறந்த மல்யுத்த வீரரான சாக்ஷி மாலிக், ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தீபா கர்மாகர் (Deepa Karmakar)

தீபா கர்மாகர் இந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், ஜிம்னாஸ்டிக் பிரிவில் கலந்து கொண்ட முதல் பெண்மணி ஆவார், இதில் நான்காவது இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அருந்ததி பட்டாச்சார்யா (Arundhati Bhattacharya)

எஸ்பிஐ வங்கியின் தலைமை நிர்வாக இயக்குனராக பதவி வகிக்கும் அருந்ததி பட்டாச்சார்யா, போர்ப்ஸ் பத்திரிக்கையின் வலிமை மிக்க பெண்களின் பட்டியலில் 25வது இடத்தில் உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit