ஜெ.,வுக்கு கொடுத்த கோவில் பிரசாதத்தில் விஷம்..?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதனையடுத்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் அவரிடம் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வருகின்ற 29ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறுகிறது. அதில் கட்சியின் சார்பில் அவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ள நிலையில், சசிகலா தம்பியின் திவாகரனுக்கும், அவர் அக்காவின் மகனான தினகரனுக்கும் வெளிப்படையான மோதல் உருவாகியுள்ளது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை கூட இல்லாத சசிகலா எப்படி பொதுச்செயலாளராக வர முடியும் என்று நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக அவர் தெரிவித்து வருகின்றார். இதனையடுத்து ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் சிகிச்சை அளித்த டாக்டர் பேசிய ஆடியோ பதிவு மற்றும் ஐதராபாத்திலிருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சென்ற மர்மபெண்ணைப் பற்றி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க போகிறேன் என்று அதிரடியாக இறங்கி உள்ளார் சசிகலா புஷ்பா.

இது மட்டும் அல்ல, ஜெயலலிதா இறப்பதற்கு முன் அவருக்கு கோவில் பிரசாதம் என்று கொடுக்கப்பட்ட தீர்த்தத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். இந்த தகவலையும் நீதிமன்றத்தில் வெளியிடப்போவதாக சசிகலா கூறியிருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*