தமிழர் கைவிட்ட கலைக்கு உயிர் கொடுத்துள்ள சீனர்கள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

mind-control

நோக்கு வர்மம் என்றால் என்ன? அதன் தொழிற்பாடுகள் என்ன? அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? சீனாவில் இந்த கலை இன்னமும் இருப்பதாக கூறப்படுகிறதே, அது உண்மையா? என்பது பற்றி நம்மில் பலருக்கு தெளிவான விளக்கம் இல்லை.

ஆங்கிலத்தில் ஹிப்னாடிசம் (HYPNOTISM) எனக் கூறப்படும் நோக்குவர்மமானது தமிழருக்கான ஒரு அடையாளம் என பலராலும் கூறப்படுகிறது. இந்த நோக்கு வர்ம கலை பற்றி பல புராணங்களிலும், இதிகாச கதைகளிலும் கூறப்பட்டுள்ளது.

அந்தவகையில் இந்தக்கலை பற்றி அகத்தியரும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனடிப்படையில் அகத்தியர், நோக்கு வர்மத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவருக்கு நிகரானவர்கள் உலகத்தில் எவரும் இருக்க மாட்டார்கள். மேலும் இது ஒரு ஆபத்தான கலை எனக்கூறியுள்ளார்.

ஆபத்து என்று உணர்ந்த வேளையில் நம்மை தாக்க வரும் உயிரினங்களை வலுவிலக்கச் செய்து தம்மை பாதுகாத்து கொள்வதே இந்த கலையின் நோக்கம்.

எத்தனை நுட்பமானவனும் கற்றுத் தேர்ந்தவனும் கூட இன்னொருவரினால் நோக்கு வர்மத்தில் கட்டுப்படுத்தப்படும் போது எதுவும் செய்ய முடியாதவனாகிறான்.

இதனால் தான் குருகுலக்கல்வி காணப்பட்ட காலத்தில் குருவிடமிருந்து அத்தனை வித்தைகளையும் பெற்றுக் கொள்ளும் சிறந்த மாணவனால் கூட இந்த நோக்கு வர்ம கலையினை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

இந்த கலையை மாணவர்கள் தவறான நோக்கத்திற்காக உபயோகிக்க முடியும் என எண்ணிய குருமார்கள் இந்த கலையினை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க அஞ்சினார்கள்.

இந்த அச்சமே நோக்கு வர்ம கலையின் அழிவிற்கு வித்திட்டது. நோக்கு வர்ம கலை தமிழரிடையே அழிந்து போயுள்ள போதிலும் கூட சீனாவில் இது “திம்-மாக்” என்ற பெயரில் வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சர்யமே.

இந்த ஆச்சர்ய கலையின் தொழிற்பாடு என்ன என்பதை தமிழராகிய நாம் அறிந்து கொள்வது அவசியமே.

அந்த வகையில்..

இந்த கலை பற்றி சித்தரியல் பெரும்பாலான விடயங்கள் சொல்லப்படுகின்றன. நமது உடலில் ஆயிரக்கணக்கிலான நாடிகள் காணப்படுகின்ற போதிலும் கூட இந்த நோக்குவர்ம கலையில் முக்கியமாக பத்து நாடிகள் உதவுகின்றன.

அந்தவகையில் அந்த பத்து நாடிகளினூ பத்து விதமான வாயுக்கள் சஞ்சாரம் செய்வதாக கூறப்படுகிறது.

பிராணன் – உயிர்க்காற்று

அபாணன் – மலக்காற்று

வியானன் – தொழிற்காற்று

உதானன் – ஒலிக்காற்று

சமானன் – நிரவுக்காற்று

நாகன் – விழிக்காற்று

கூர்மன் – இமைக்காற்று

கிருகரன் – தும்மற்காற்று

தேவதத்தன் – கொட்டாவிக்காற்று

தனஞ்செயன் – வீங்கல் காற்று

இந்த வாயுக்கள் நாடிகளின் முடிச்சுகளில் சந்திக்கும் புள்ளிகளே வர்ம புள்ளிகளாக கருதப்படுகின்றன.

இதிலும் கூட பல வாயுக்கள் சந்திக்கும் புள்ளி நுட்பமான வர்ம புள்ளிகளாகுகின்றன.

இந்த புள்ளிகள் மீது கவனக் குவிப்போடும் முனைப்போடும் பார்வையை செலுத்தும் போது பார்வையின் தீவிரம் பொறுத்து விளைவுகள் உருவாவதாக அகத்தியரால் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எப்பொழுதும் ஒரு தாக்கத்திற்கு எதிரான பருமனில் சமனான மற்றொரு தாக்கம் இருக்கிறது என விஞ்ஞானம் கூறுகிறது.

இதனையே சித்தரியலும் வலியுருத்துபவையாக அமைகின்றன. இந்த நோக்கு வர்மத்தினை பயன்படுத்தி எவ்வாறு ஒருவரை கட்டிப்போட முடியுமே, அதே போன்று அந்த கட்டுக்குள் சிக்காமல் தப்பிக்கவும் வழி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை விசித்திரமே!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit