சுனாமியில் இறந்தவர்களை நினைவுகூர்ந்த மலையக மக்கள்.

பிறப்பு : - இறப்பு :

சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இதை முன்னிட்டு மலையக மக்கள் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

ஹட்டன் பொலிஸார் மற்றும் நகர வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான சம்பவமாக ஆழிப் பேரலை அனர்த்தம் இடம்பெற்றது.

இந்த அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் என அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit