பாஜக தலைவர் அமித்ஷா செய்திருக்கும் 500கோடி கருப்பப்பண ஊழல்.

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அமித்ஷா, பாஜகவின் தேசியத் தலைவர், நிர்வாக இயக்குனராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கோ- கூட்டுறவு வங்கியில் நவ 8-12ம் தேதிகளுக்குள் ரூ500 கோடி பணம் செலுத்தப்பட்டிருக்கிறது.

ஒரு கூட்டுறவு வங்கியில் வெறும் மூன்று நாட்களுக்குள் இவ்வளவு அதிகமாக பணம் செலுத்தப்பட்டதும், மாற்றப்பட்டதும் எப்படி?.. அதுவும் ‘ஊழலற்றவர்களாக’ ‘புனித ஆன்மாக்களாக’, ‘கருப்புப் பணத்தை ஒழிப்பவர்களாக’ கூச்சலிடும் பாஜகவின் தலைவர் அமித்ஷா நிர்வாக இயக்குனாராக இருக்கும் வங்கியில் இந்த நிலையெனில், பாஜகவின் கள்ள பண ஒழிப்பின் நோக்கமென்ன?

எந்த யோக்கியதையில் , தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ராணுவத்தை வைத்தும், சங் பரிவாரங்களை வைத்தும் மிரட்டுவது கட்டப்பஞ்சாயத்தாக பார்க்காமல் எப்படி பார்ப்பது?.
கூட்டுறவு வங்கிகள் பழைய பணத்தை மாற்றுவதற்கு தடைவிதித்திருக்கப்பட்டிருக்கும் நிலையில், பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளில் பழைய பணம் மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு, கேரளா, வங்காளம் போன்ற மாநிலங்களில் விவசாயிகளுக்கு கடன் தர விடாமல் கூட்டுறவு வங்கிகளை முடக்கிய பாஜக- மோடி அரசு, தனது குஜராத் மாநிலத்தில் மட்டும் திறந்து விட்டிருக்கிறது. குஜராத்தில் 18 கூட்டுறவு வங்கியில் 17 வங்கிகள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. இதுமட்டுமல்லாமல் குஜராத் அமைச்சர் சங்கர்பாய் சவுத்ரி தலைவராக இருக்கும் கூட்டுறவு வங்கியில் 200 கோடி ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது.

கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்ற
ரிசர்வ் வங்கி தடைவிதித்திருந்த நிலையில் இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?… ரிசர்வ் வங்கியின் தலைவரும் குஜராத்தி மார்வாடி கும்பல் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஆக, இந்த பண முடக்கம் என்பது பாஜகவினர் மட்டும் தங்களது கருப்பு பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றும் யுக்தி என்பதைத் தவிர்த்து வேறில்லை. குஜராத்தி-மார்வாடிகளுக்கு மட்டுமே இதில் லாபமிருக்கிறது என்பதால் தான் மதுரையில் மார்வாரிகள் பண முடக்கத்தை ஆதரித்து ஊர்வலம் போக முடிகிறது.
குஜராத் பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ யதின் ஓஜா, அகமதாபாத் கூட்டுரவு வங்கியில் பணம் செலுத்த நின்றிருந்த பாஜகவின் கும்பல்களைப் பற்றிய வீடியோ தன்னிடம் இருப்பதாக பகிரங்கமாக மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு, 56” இன்ச் மோடி இதுவரை பதிலளிக்கவில்லை.

அமித் ஷா எனும் பாஜகவின் தேசிய கட்சி தலைவர் செய்திருக்கும் இந்த 500 கோடி ரூபாய் கருப்புப் பணம் குறித்து ‘துணை ராணூவத்தோடு’ ரெய்டு நடத்துவார்களா?

அல்லது ‘இந்த நேர்மை, யோக்கியம், ஊழல் ஒழிப்பு’ நாடகங்கள் எல்லாம் தமிழகம் போன்ற பகுதிகளுக்கு மட்டுமா?

சென்ற டிசம்பர் 19ம் தேதி திங்கள் கிழமை, இவ்வங்கியின் அகமதாபாத் ஆஷ்ரம் சாலையில் இருக்கும் தலைமை கிளையில் அமலாக்கத் துறையினரால் 7 மணி நேரம் நடத்தபப்ட்ட ரெய்டு இதுவரை ஊடகங்களால் பகிரங்கப்படுத்தபப்ட வில்லை. தமிழகத்தில் நடந்த செய்தி மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டிருக்கிறது.

பாஜக செய்யும் இந்த திருட்டுத் தனத்தையும், அயோக்கியத் தனத்தையும் கண்டும் காணாமல், தங்களது கட்சித் தோழர்கள், கட்சி கிளைகள் மூலம் மக்களைத் திரட்டாமல், சிறுவணிகர்கள், தொழிலாளர்களை திரட்டாமல், தொழிற்சங்கங்களை, பேராசிரியர் சங்கங்களை, மத்திய ஊழியர் அமைப்புகளை திரட்டாமல் வீதிக்கு வரவைக்காமல் கள்ள மெளனம் காக்கும் சி.பி.எம் போன்ற கட்சிகள் இருக்கும்வரை பாஜக உயிர் வாழவே செய்யும். இவ்வளவு பெரும் தேசிய நெருக்கடியின் பொழுதும், ஏழைகள் சுரண்டப்படும் பொழுதும் கம்யூனிஸ்ட் கட்சி கொடியை இழுக்கு செய்யும் இந்த மார்க்ஸ்சிஸ்ட் கும்பல் இருக்கும் வரை நேர்மையான இளைஞர்கள் காய் அடிப்பது நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஒரு புறம் பாஜக-வின் இந்துத்துவத்திற்கு கள்ள மெளனத்தின் மூலம் ஆதரவு , மறுபுறம் இளைஞர்களை காயடிப்பது என நகரும் இந்த வலையிலிருந்து மீள்வது அவசியம். மார்க்ஸிஸ்ட் கட்சியின் நேர்மையற்ற தரகு தலைமை உடனடியாக முடக்கப்பட்டு நேர்மையான இளைஞர்கள் அக்கட்சியை கைப்பற்றவேண்டும்.

இத்தனை திருட்டுத் தனத்தையும் செய்வதை அறிந்த பின்னரும் எவராவது மோடி-பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்தால் சரியான முறையில் ஆதாரங்களோடு பதில் தாருங்கள் தோழர்களே.
தேசபக்தியாம், நாடு முன்னேற்றமாம்.
பொறுக்கிகளிடம் அமைதிகாக்காதீர்கள்.

” அமித்ஷாவை கைது செய். பாஜக அமைச்சர்கள், தலைவர்கள் வீடுகளுக்கு ரெய்டு நடத்து.”
இதை கேட்பதைவிட்டு, தமிழகத்திலிருக்கும் ஊழல் பெருச்சாளிகளை நோக்கி மட்டும் உங்கள் கைநீளுமெனில் நீங்களும் பாஜகவின் கைக்கூலிகள் என்றே அர்த்தம்.

இதை தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் கருத்தில் வைப்பது அவசியம். நெருக்கடியான இந்துத்துவ பாசிசம் எழுந்து வரும் தருனத்தில், தமிழகத்தின் இறையாண்மையை காக்கும்வகையில் நடக்காமல் பொறுப்பற்று நடந்து கொள்வீர்களெனில் வரலாறு மன்னிக்காது.

ஊழலைப்பற்றியும், கருப்புபணத்தைப் பற்றியுமான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவினை நோக்கி கை நீட்டாதவர்கள் அயோக்கியர்களே.
அமித்ஷாவின் இந்த அயோக்கியத் தனத்தை வெளிவிடாமல் ஊடகங்கள் முடக்கி இருக்கின்றன. மம்தா மட்டுமே இது குறித்து பேசி இருக்கிறார். தமிழக ஊடகங்கள் இதுகுறித்து பேசவேண்டும், அம்பலப்படுத்த வேண்டும்.

நேர்மை, யோக்கியதை எனப் பேசும் நிர்மலா சீத்தாராமனிடம் இந்தக் கேள்வியை தமிழக ஊடகங்கள் கேட்குமா?

தமிழகத்தின் ஆளும்கட்சி- எதிர்க்கட்சி தலைவர்கள் இதுகுறித்து பேசுவாரா?..
தமிழகத்தின் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும், ஊடகங்களும், சிந்தனையாளர்களும் இதுகுறித்து பகிரங்கமாக பேச வேண்டும்.

பாஜகவை அம்பலப்படுத்துவதற்குரிய ஆதாரங்களை நவம்பர் 8 முதல் மே17 இயக்கம் வெளியிட்டு வருகிறது. பல தோழமைகளும் பேசுகிறார்கள்.

ஒரே குரலில் பேச தமிழகம் தயாராக வேண்டும்.
இல்லையெனில் அழிக்கப்படுவோம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*