வரலாற்று பார்வையில் இன்று! யாழில் கிறிஸ்மஸ் இரவுக்காக கூடியிருந்த 300 பேருக்கு நடந்த சோகம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டிசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1690 – யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துமஸ் இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 கத்தோலிக்கர்கள் டச்சுப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.

1715 – சுவீடனின் துருப்புகள் நோர்வேயை ஆக்கிரமித்தன.

1777 – கிரிட்டிமட்டி தீவு ஜேம்ஸ் குக்கினால் கண்டறியப்பட்டது.

1851 – வாஷிங்டன் டிசியில் காங்கிரஸ் நூலகம் தீப்பிடித்ததில் பெறுமதியான நூல்கள் அழிந்தன.

1906 – ரெஜினால்ட் ஃபெசெண்டென் உலகின் முதலாவது வானொலி நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார்.

1914 – முதலாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

1924 – அல்பேனியா குடியரசாகியது.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தது.

1941 – இரண்டாம் உலகப் போர்: மலேசியாவின் சரவாக் மாநிலத் தலைநகர் கூச்சிங் ஜப்பானியரிடம் வீழ்ந்தது.

1951 – லிபியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது. முதலாம் ஐட்ரிஸ் லிபிய மன்னனாக முடிசூடினார்.

1953 – நியூசிலாந்தில் டாங்கிவாய் என்ற இடத்தில் தொடருந்து மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர்.

1954 – லாவோஸ் விடுதலை பெற்றது.

1966 – தெற்கு வியட்நாமில் அமெரிக்க இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 129 பேர் கொல்லப்பட்டனர்.

1968 – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 8 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டத்தில் நுழைந்தது.

1974 – ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.

1979 – ஆப்கானிஸ்தானின் கம்யூனிச அரசைக் காப்பதற்காக சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானை முற்றுகையிட்டது.

1979 – ஐரோப்பாவின் முதலாவது விண்கலம் ஆரியான் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

2005 – யோசப் பரராஜசிங்கம் படுகொலை: இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு தேவாலயம் ஒன்றில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*