சுதந்திரம் வந்தாச்சு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தீட்டி வைச்சிருந்த
ஆயுதங்கள் எல்லாமே
துருப் பிடிச்சுப் போயாச்சு
காட்டிக் கொடுத்தவர்கள்
எல்லோரும் இப்போது
காவலர்கள் ஆயாச்சு
பாட்டி வைத்தியத்தில்
இருந்த நன்மைகளும்
பரலோகம் போயாச்சு
ஏட்டிக்குப் போட்டியாக
எதிர் வீட்டில் வந்தவர்கள்
எமதூதர் என்றாச்சு
நீட்டி நிமிர்த்தி வைத்த
செங்கோல் விழுந்து
பாதி பாதியாச்சு
சேட்டை விட்டவர்கள்
சேவை செய்பவராய்ச்
செய்திகள் வந்தாச்சு
கோட்டை மதிலுடைச்சு
கோமாளியாட்டங்கள்
நாட்டைக் குழப்பியாச்சு
வீட்டிலுள்ளவரும்
விபரங்கள் அறிஞ்சாலே
சிரச்சேதம் என்றாச்சு
பாட்டுப் படிச்சாலும்
பாம்பாய்ப் படமெடுத்துப்
பல்லும் காட்டியாச்சு
கூட்டுக்குள் அடைச்சுவைச்சுக்
கூடிக்குலாவுதற்குச்
சுதந்திரம் வந்தாச்சு
வாட்டி வதைச்சவனை
வல்லவன் இவனென்று
வாயாரப் புகழ்ந்தாச்சு
பூட்டை உடைத்து
வெளியே தான் விட்டாலும்
சிறகை இழந்தாச்சு.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*