பறக்கும் காரை சாத்தியமாக்கும் எரோமாபைல் (Video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வியென்னாவில் சமீபத்தில் நடத்தப் பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான Pioneer festival புதிய வகை வாகனக் கண்டுபிடிப்புக்களுக்கான விழாவில் ஸ்டெஃபன் க்லெயின் மற்றும் ஜுராஜ் வக்குலிக் ஆகியோர் இணைந்து தயாரித்த எரோமாபைல் என்ற உலகின் அதிவேக பறக்கும் காரின் 3 ஆவது பதிப்பு அறிமுகமாகியது.

எரோமாபைல் கார் இறக்கைகளுடன் கார்பன் ஃபைபரால் தயாரிக்கப் பட்ட 6 மீட்டர் மட்டுமே நீளமுடைய பறக்கும் காராகும்.

இந்த எரோமாபைல் கார் ஸ்லோவாக்கியாவில் வடிவமைக்கப் பட்டு கட்டமைக்கப் பட்டதாகும். 543 மைல் அல்லது 875 Km தூரத்துக்குப் பறக்கக் கூடிய இக்கார் தரையில் அதிகபட்சம் 200 Km/h வேகத்தில் செல்லத் தக்கது. தரை மற்றும் வான் என இரு வழிகளிலும் அதிவேகத்துடன் செல்லக் கூடிய இது போன்ற வாகனம் இதற்கு முன்னர் தயாரிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த எரோமாபைல் சுமார் 300 மீட்டர் தரையில் சென்றவுடனேயே டேக் ஆஃப் ஆகக் கூடிய திறன் கொண்டது என்பதுடன் தரையில் இறங்கி 50 மீட்டருக்குள் ஓய்வுக்கு வரக்கூடிய தன்மையும் உடையது என்பதால் அதிக நெகிழ்தன்மை உடையதாகக் கருதப் படுகின்றது.

இதனைத் தயாரித்தவர்கள் கூற்றுப் படி இக்காருக்கான சந்தைப் படுத்துதல் ஆனது சிலிக்கன் பள்ளத்தாக்கில் தயாரிக்கப் படும் பொருட்களின் சராசரி விலையில் அடங்காது எனினும் பாதைகள் மிக மோசமாக உள்ள அல்லது பாதைகளே இல்லாத பகுதிகள் அதிகம் இருக்கும் வளர்ந்து வரும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இதற்கான வரவேற்பு இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த ஏரோமாபைல் காரைப் பார்க்கும் போது ஆப்பிரிக்க வீதிகளில் அதிகமாகப் பயணிக்கும் ஆஃப் றோடர் கார்களைப் போன்று அல்லாது சற்று வழவழப்பான பந்தயக் கார் போன்று தென்படுவது அவதானிக்கத் தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இதனது பரிசோதனை ஓட்டத்தை மிக அழகாக வீடியோ காட்சிகளாக பதிவு செய்து வெளியிட்டுள்ளனர் அதன் இணைப்பு இங்கே

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*