சாவக்கச்சேரியில் கோரவிபத்து மூன்று பெண்கள் உட்ப்பட பத்துபேர் மரணம் பலர் காயம் – (படங்கள் இணைப்பு)

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

chavekasaeri-accdent-copy

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 10 பேர் பலியாகி உள்ளனர்.

குறித்த விபத்து சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து சாவகச்சேரி நோக்கி சிங்களவர்களை ஏற்றிச்சென்ற ஹயஸ் வானே விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும், இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஹயஸ் வானின் டயரில் காற்று போயுள்ளதால், வீதியை விட்டு விளகி பஸ்ஸூடன் மோதியுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit