பத்மபிரியாவுக்கும் மீரா ஜாஸ்மினுக்கும் கல்யாணமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சேரன் இயக்கி தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. டெல்லியில் பிறந்து செகந்திராபாத்தில் வளர்ந்த பத்மப்ரியா அடிப்படையில் கிளாஸிகல் டான்ஸர். அவ்வப்போது மாடலிங்கும் செய்த வந்த பத்மப்ரியா, 2004 ஆம் வருடம் சீனு வசந்தி லட்சுமி என்ற தெலுங்குப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பிறகு தமிழுக்கு வந்த பத்மப்ரியா, ‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ’பொக்கிஷம்’ உட்பட சில படங்களில் நடித்தார். தமிழ் படங்கள் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்சமயம் இவருக்கு படவாய்ப்புக்கள் ஏதுமில்லை.

இந்நிலையில் நடிகை பத்மப்ரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் நேற்று மும்பையில் திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆராய்ச்சிப் படிப்பிற்காக நியூயார்க் சென்றிருந்த நடிகை பத்மப்ரியா அங்கே ஜாஸ்மினுடன் ஏற்பட்ட நட்பு பிறகு காதலாகி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஐஐடியில் மெக்கானிகல் என்ஜினியரிங் படித்துள்ள ஜாஸ்மின் தற்போது மசாசூட் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் உயர்பதவியில் இருக்கிறார். பத்மப்ரியா – ஜாஸ்மின் திருமணம் மும்பையில் எளிய முறையில் நடந்துள்ளது.

யாரிடமும் சொல்லாமல் இந்த திருமணம் நடந்ததால், பலருக்கும் இதுகுறித்து தகவல் தெரியவில்லை. ஜாஸ்மினும் பத்ம பிரியாவுக்கும் திருமணம் என்பதை மீரா ஜாஸ்மினுக்கும் பத்மபிரியவிற்கும் திருமணம் என தகவல்கள் பரவிட்டன. இந்தியாவில் பெண் இருவர் அதுவும் பிரபல நடிகைகள் திருமணம் செய்துகொண்டனரா என பலரும் குழம்பி விட்டனர்.

ஆனாலும் இன்னும் திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் பத்மபிரியா முறையாக வெளியிடவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

One comment

  1. Hello guys Want to see who’s viewing your profile right now? My sister’s friend visited my profile 282 times this week 🙂 http://facebook.com/416364978517391?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*