வரலாற்றின் பார்வையில் இன்று: ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது…..,

பிறப்பு : - இறப்பு :

டிசம்பர் 16 (December 16) கிரிகோரியன் ஆண்டின் 350 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 351 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 15 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1431 – இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.

1497 – வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.

1598 – கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.

1653 – சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொது நலவாயத்தின் தலைவரானார்.

1707 – ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.

1773 – அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் – அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.

1835 – நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.

1857 – இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.

1920 – சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் கொல்லப்பட்டனர்.

1922 – போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1925 – இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.

1960 – ஐக்கிய அமெரிக்க விமானம் நியூ யோர்க்கை அண்மிக்கும் போது மோதியதில் 134 பேர் கொல்லப்பட்டனர்.

1971 – வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.

1971 – பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1991 – கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit