உலக வரலாற்றிலேயே முதல்முறையாக..: வால் நட்சத்திரத்தில் தரையிறங்கிய விண்கலம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்ட ரோசெட்டா விண்கலத்தில் இருந்து ஃபிலே என்ற லேண்டர் 67பி/சுரிமோவ்-கெரசிமென்கா என்ற வால் நட்சத்திரத்தில் புதன்கிழமை வெற்றிகரமாக தரையிறங்கியது.

வால் நட்டசத்திரங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் கடந்த 2004ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி ரோசெட்டா விண்கலத்தை விண்ணில் ஏவியது. அதில் ஃபிலே என்ற 100 கிலோ எடையுள்ள லேண்டர் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விண்கலம் ரூ.9 ஆயிரத்து 600 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. 67பி என்ற வால் நட்சத்திரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ரோசெட்டா 10 ஆண்டுகளாக 6.4 பில்லியன் மைல் தொலைவு பயணம் செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் வால் நட்சத்திரத்தை அடைந்தது.

இதையடுத்து ரோசெட்டாவில் இணைக்கப்பட்ட ஃபிலே லேண்டர் நேற்று காலை 3.30 மணி அளவில் அதில் இருந்து பிரிந்து வால் நட்சத்திரத்தில் தரையிறங்கத் தயாரானது. ரோசெட்டாவில் இருந்து பிரிந்து 7 மணிநேரம் கழித்து மாலை 4.03 மணிக்கு ஃபிலே வால் நட்சத்திரத்தில் பத்திரமாக தரையிறங்கியது. வால் நட்சத்திரத்தில் லேண்டர் பத்திரமாக தரையிறங்கியுள்ளது. வால் நட்சத்திரத்தில் பூமியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு கலம் தரையிறங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிலே வால் நட்சத்திரத்தின் தரையில் சில முறை மோதி, பவுன்ஸ் ஆகி பிறகு மீண்டும் தரையிறங்கியுள்ளது. இதில் ஃபிலேவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.

67பி வால் நட்சத்திரம் பூமியில் இருந்து 500 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஃபிலே லேண்டர் வால் நட்சத்திரத்தில் 9 வகை ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*