சுய இன்பம் குறித்த சில கட்டுக் கதைகள்!!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பருவ காலத்தில் ஆண்களும் பெண்களும் சுய இன்பம் என்று அழைக்கப்படும் சிற்றின்பத்தில் ஈடுபடுவது இயல்பான ஒன்றுதான்! இருந்தாலும், சிலர் அது குறித்து பெரிதும் பயப்படுவார்கள்; தேவையில்லாத சந்தேகங்கள் எல்லாம் வரும்.

சுய இன்பத்தில் ஈடுபடுவதால் உடல் நலம் கடுமையாகப் பாதிக்குமோ என்று கவலைப்படுவார்கள். இப்படிக் கவலைப்பட்டு கவலைப்பட்டே அந்தப் பழக்கத்தைச் அனுபவிக்காமலேயே இருந்து தன் டீன்-ஏஜ் முழுவதையும் தொலைத்தவர்களும் உண்டு.

குறிப்பாக, பெண்கள் சிற்றின்பத்தில் ஈடுபடுவதை இந்தச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளவே செய்யாது. அப்பழக்கம் உள்ளவர்களைக் கொச்சையாகத்தான் இந்தச் சமுதாயம் பார்க்கும். சிற்றின்பம் குறித்த பலவிதமான கட்டுக் கதைகளைக் காலம் காலமாக சில கலாச்சாரக் காவலர்கள் அவிழ்த்து விட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பெண்களே, அவையெல்லாம் கட்டுக் கதைகள்தான் என்பதால், சிற்றின்பம் குறித்து நீங்கள் அச்சமோ பயமோ கொள்ளத் தேவையில்லை. அத்தகைய சில கட்டுக் கதைகள் குறித்துப் பார்க்கலாம்.

‘சிற்றின்பத்தில் ஆண்கள் மட்டும் தான் ஈடுபடலாம். ஆனால், பெண்கள் அதைச் செய்யவே கூடாது’ என்ற ஒரு அறியாமையைக் காலம் காலமாகச் சிலர் கூறி வருகிறார்கள். அப்படியே செய்தாலும் அவர்கள் வெளியில் அதைப் பற்றிப் பேசக் கூடாது என்றும் கூடச் சொல்வார்கள் போலும்! ஒரு கணக்கெடுப்பின் படி, சிற்றின்பத்தில் ஈடுபடும் பெண்கள் தான் அதிக திடகாத்திரமாகவும், மன உறுதியுடனும் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் பீரியட்ஸ் வரும் காலத்தில் பெண்கள் சிற்றின்பத்தில் ஈடுபடக் கூடாது என்று சொல்வார்கள். அது கட்டுக்கதையே! பீரியட்ஸ் காலங்களில் பேரின்பமான செக்ஸில் ஈடுபடுவதையே மருத்துவ அறிவியல் தடுப்பதில்லை. அப்படி இருக்கும் போது, சிற்றின்பம் என்ன செய்யும்?

இதை சொல்லக் கூடாதுதான். இருந்தாலும் கட்டுக் கதை என்பதால் சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. பெண்கள் வயதிற்கு வருவதற்கு முன் சிற்றின்பத்தில் ஈடுபடுவது உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதல் என்று சிலர் சொல்வதுண்டு. சிற்றின்பத்தை முறையாகச் செய்தால் அது எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான செக்ஸுக்கு வழிவகுக்கும். இது மிகவும் சென்சிட்டிவ்வான விஷயம் என்பதால் பெண்கள் தான் தம் பெண் பிள்ளைகளுக்குப் பக்குவமாக சொல்லிக் கொடுக்க வேண்டும்.

சிற்றின்பத்தில் அதிகம் ஈடுபட்டுக் கொண்டு அதில் போதையாகி இருந்தால் பேரின்பமான செக்ஸை அனுபவிப்பதில் சிரமம் இருக்கும் என்று சிலர் சொல்வார்கள். உண்மை என்னவென்றால், சிற்றின்பத்தில் அனுபவம் அதிகரிக்க அதிகரிக்கத் தான் பேரின்பத்தைத் தங்கு தடையின்றி முழுமையாக அனுபவிக்க முடியுமாம்!

சிற்றின்பத்தில் ஈடுபட்டாலே கருத்தரித்து விடும் என்பது முழுக்க முழுக்கக் கட்டுக் கதைதான்! சிற்றின்பத்தால் எந்த விதத்திலும் பெண்கள் கர்ப்பமடைவதில்லை. முறையான உடலுறவு மூலம் ஆண்களின் விந்து பெண்களின் கரு முட்டையை அட்டாக் செய்தால்தான் கருத்தரிக்க வாய்ப்புண்டு.

Thatstamil

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*