தான் ஆடா விட்டாலும் தசை ஆட வேண்டாமா? போரின் அவலம், தொடரும் துயரம் (காணொளி)

பிறப்பு : - இறப்பு :

தாயகத்தில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்து 7 ஆண்டுகள் ஆகின்ற போதிலும் போரின் பாதிப்பிற்கு ஆளாகிய முன்னைநாள் போராளிகளதும், பொது மக்களதும் இயல்பு வாழ்வு இன்னமும் பழைய நிலைமைக்குத் திரும்பவில்லை. மன ரீதியிலான தழும்புகள் ஆறுவதற்குக் காலம் எடுக்கும் என்பது தெரிந்ததே. ஆனால், அவர்தம் பௌதிக ரீதியலான தேவைகள் கூட இன்னமும் நிறைவு செய்யப்படாத நிலையே இன்றும் நீடிக்கிறது.

யதார்த்தத்தில் அரசாங்கமே இந்தத் தேவைகளை நிறைவேற்றி வைக்கக் கடமைப்பட்டது. ஆனால், ஆட்சியில் இருக்கும் அரசோ தமிழர் நலன்சார் அரசாகவோ, இன நல்லிணக்கத்தில் அக்கறை கொண்ட அரசாகவோ இல்லாத சூழலில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரம் தொடர்கதையாக நீண்டு செல்கிறது.

யுத்தத்தின் விளைவாகப் புலம்பெயர்ந்த மக்கள் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவக் கூடிய சூழலில் அவர்தம் மத்தியில் இருந்து ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்கக் கூடிய இதய சுத்தியான சக்திகள் இல்லாத நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் முழுமையாகக் கவனிக்கப்படாமலேயே இருந்து வருகின்றது.

காலம் கடந்து போவதைப் பார்த்துக் கொண்டே இருக்க முடியாத ஒருசில நல்ல உள்ளங்கள் நேசக்கரம் நீட்டும்போது அவர்களின் கரம்பற்றி, அவர்களின் பாதையைச் செப்பனிட்டு, வழிகாட்டி, அழைத்துச் செல்ல வேண்டியது ஊடகங்களின் தார்மீகக் கடமை என்ற அடிப்படையில் கதிரவன் குழுமம் இந்தக் காணொளியை தங்கள் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றது. இதன் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சிறுதுளி முன்னேற்றமாவது உருவாகுமானால் நல் இதயம் படைத்த மனிதர்கள் என்ற அடிப்படையில் நாமும் மகிழ்வோம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit