நாட்டில் 47,900 பேர் பாதிப்பு – 77 பேர் மரணம்

பிறப்பு : - இறப்பு :

நாட்டின் 10 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் ஆபத்தான நிலைமை இருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், குருணாகல், இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுகிறது.

இதனடிப்படையில், குறித்த 10 மாவட்டங்களில் 30 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் சுகாதார ஊழியர்களின் விடுமுறைகளை இரத்துச் செய்ய சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கான சுற்றுநிருபம் இன்று வெளியிடப்படவுள்ளது.

டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட சுகாதார அமைச்சில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

டெங்கு நுளம்பு தொடர்பாக பரிசோதனை நடத்த விசாரணை குழுக்கள் வீடுகளுக்கு செல்லும் போது வீட்டின் உரிமையாளரின் அனுமதியை பெறவேண்டும் என்ற சட்டத்தை இரத்துச் செய்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டில் இதுவரை 47 ஆயிரத்து 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 77 பேர் மரணித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit