டிஆர்எஸ் முறை கேட்ட இங்கிலாந்து வீரர்: கிண்டல் அடித்த விராட் கோஹ்லி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ஓட்டங்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விராட் கோஹ்லி மற்றும் விஜயின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 451 ஓட்டங்கள் குவித்து விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அடில்ரசீட் வீசிய பந்தை எதிர் கொண்ட இந்திய வீரர் ஜெயண்ட் ராதவ் லெக் திசையில் ஆட முயற்சித்தார். ஆனால் அது துரதரிஷ்டவசமாக பேட்டின் விளிம்பில் பட்டு இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் கையில் தஞ்சம் புகுந்தது.

இதற்கு இங்கிலாந்து வீரர்கள், நடுவரிடம் அவுட் கேட்டனர். ஆனால் அவரோ இதற்கு மறுப்பு தெரிவிக்க, இங்கிலாந்து அணியின் தலைவரான குக் டிஆர்எஸ் முறைக்கு அப்பீல் செய்தார். ஆனால் இங்கிலாந்து அணியோ இன்றைய ஆட்டத்திற்கான இரண்டு டிஆர்எஸ் முறையை வீணடித்து விட்டனர்.

இதனால் டிஆர்எஸ் முறை மறுக்கப்பட்டது. இதை அறிந்த இந்திய அணியின் தலைவர் கோஹ்லி டிஆர்எஸ் முறையைத் தான் வீணடித்துவிட்டீர்களே என்று கிண்டலடிப்பது போல் கை அசைத்து புன்னகைத்தார்.

ஆனால் அதை ரீப்ளே செய்து பார்க்கையில் அவுட் என தெரியவந்தது. இருப்பினும் டிஆர்எஸ் முறையை இங்கிலாந்து அணி வீணடித்து விட்டதால், ஜெயண்ட் ராதவ் விக்கெட் வீழ்ச்சியிலிருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*