டீனேஜ் பெண்களின் சுய கௌரவத்திற்கு வேட்டு வைக்கும் சமூக வலைதளங்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட் !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்தில் பள்ளி மாணவ, மாணவியரின் சுயகௌரவம் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 30 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதில் 14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகளில் தங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டில் 14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகள் 41 சதவீதம் பேர் தங்களுக்கு அதிக சுயகௌரவம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வெறும் 33 சதவீதம் பேரே அதிக சுயகௌரவம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆன்லைனில் தொடர்புகள் அதிகரித்திருப்பது, சமூக வலைதள பயன்பாடு, பொருளாதார நிலைமை சரியில்லாதது ஆகியவை பல டீனேஜ் பெண்களின் சுயகௌரவத்தை குறைத்துள்ளது என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. 14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகளில் நான்கில் 3 பேர் ஆன்லைனில் சாட் செய்துள்ளனர். அதில் 13 சதவீதம் பேர் மனதை பாதிக்கும், பயப்படும் வகையிலான தகவலை பெற்றுள்ளனர்.

ஐந்தில் ஒரு சிறுமி தனக்கு யார் என்றே தெரியாத நபரிடம் சாட் செய்துள்ளார். மாணவ, மாணவியரில் பலர் ஆன்லைனில் ஆபாசம் மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை பார்த்துள்ளனர். ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாணவ, மாணவியர் கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*