தன்மானமே தமிழ் மானம்…

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஏன் இந்த மாற்றம்……..?
யார் தூண்டிய மாற்றம்…..?
மாற்றம் என்பது தேவையே…..
வாழ்க்கையின் முன்னேற்றத்தை…..
ஏற்படுதும் மாற்றம் மட்டுமே தேவை……
வாழ்வை சீரழிக்கும் இந்த மாற்றத்தை……
உனக்கு யார் தூண்டிய மாற்றம்………?
பூட்டன் காலத்தை நோக்கு……..
படிப்பறிவு கிடையாது ……..
பட்டறிவே பெரும் படிப்பு …….
பட்டறிவை வைத்தபடி……….
தலை நிமிர்ந்து வாழ்ந்தவர்கள்……
அனுபவத்தால் வாழ்க்கையை……
அனுபவித்த அனுபவசாலிகள்………!!!
பாட்டன் காலத்தை நோக்கு……
படித்தது சொற்பம்- படித்தமேதைகளுடன்…..
சவால் விட்டு வாழ்ந்துகாடியவர்கள்…….
படிகாத மேதைகள் என்று வாழ்ந்து…….
கட்டிய அறிவாளிகள்………..!!!
தந்தையின் காலத்தை நோக்கு……
கண்விழித்து படித்து தன்னையும்…..
தன் தங்கைகளையும் வாழவைத்து……
வாழ்ந்துகொண்டிருக்கும் உடல்தேய…….
உழைக்கும் உழைப்பாளி………………!!!
மகனே நீ என்ன செய்கிறாய்…….?
பூட்டனின் நன்மதிப்பை…….
பாட்டனின் சொத்தை……..
தந்தையின் தியாகத்தை……
தாயின் ஏக்கத்தை…………….
உடன் பிறப்பின் மானத்தை…………….
அழித்து கொண்டிருக்கிறாய்………….!!!
மகனே நீ தவறானவன் அல்ல……
தூண்டுதலால் துரோகம் போகிறாய்………
தூண்டுபவனை துண்டித்துவிடு……
தூண்டுபவனின் துரோகத்தை கண்டுகொள்………
மாயதூக்கத்திலிருந்து விழித்துகொள்…….
தமிழும் தமிழ் பண்பாடும்…….
வீரத்தையும் தியாகத்தையும் விதைத்தது…..
அவை விருட்சமாய் வளர்கிறது……
நீயே அதன் மூலவேர் நினைவில் வைத்திரு…..!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*