ஈழத்தமிழினமே மன்னித்தோம் மறந்தோமா? யார் இந்த ஜெயலலிதா-ஆதி

பிறப்பு : - இறப்பு :

ஈழத்தமிழினமே ஈழத்தமிழர்கள் என்ற அடையாளத்துடன் உலகம் எங்கிலும் நாம் அகதிகளாக அலைந்து திரிந்தாலும்  நாங்கள் இந்த உலகில் வாழும் ஏனைய சமூகங்களை விட சற்று வித்தியாசமானவர்கள் முதன்மையானவர்கள் உலகத்தில் பன்னிரண்டு கோடிக்கும் அதிகமான தமிழர்கள் வாழ்ந்தாலும்பல தெருகோடிகளின் வாழுகின்ற எம்மைத்தான் தமிழர்கள் என்று இந்த உலகம் நினைக்கின்றது தமிழ் என்ற மொழிக்கு உரிமையுடயவர்களாக எம்மைதான் அடையாளப்படுத்துகின்றனர் ஆசியா ஐரோப்பியா அமெரிக்கா என்று கண்டங்களை கடந்து வாழ்கின்ற போதும் நாங்கள் ஒழுக்கமுடயவர்களாகவும் தெளிவானசிந்தனை வெளிப்படையான பேச்சாற்றல் கல்வியறிவு கலாசாரத்தின் சிறப்புக்கள் என்று பல காரணிகளால் உலகின் மற்றய இனத்தவரை விட முன்னிலையானவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்ற ஒரே ஒரு பெருமை மட்டுமே இன்று எங்களுக்கு எஞ்சியுள்ளது இந்த பெருமையினை .தேடிக்கொடுத்தவர்கள் வேறு யாரும் அல்ல எங்கள் தலைவனும் அவன் பின்னே நின்ற தளபதிகளும் சேனைகளுமே ஆனால் இன்று எல்லாம் சிதறி சின்னாபின்னமாயபோய்விட்டது எங்கள் கனவுகள் கற்பனைகள் எல்லாம் காணல் நீராக மாறிவிடுமா என்ற அச்சத்துடன் நாட்கள் நகர்ந்துகொண்டிருக்கின்றன  ஆனால் அதோடுஇன்னும் இன்னும் பல சோதனைகளை எங்கள் சமூகம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கின்றது…..,

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஒரு சில கேவலமான செயற்பாடுகளை எவளவு விலைகொடுத்தாலும் செய்யமாட்டோம் அப்படியான ஒரு நல்ல வளர்பினில் எங்கள் தேசத்தை வளர்த்தவன் எங்கள் தலைவன் ஆனால் இன்று மேப்போன் இல்ல காரணத்திலோ என்னவோ சில மந்தைகள்தடம் மாறிக்கொண்டிருக்கின்றன என்பது வேதனை எனவே அதை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு ஒவ்வெரு தமிழர்களுக்கும் உள்ளது எனவே இங்கே ஒரு விடயத்தை முக்கியமாக சுட்டிக்காட்டவேண்டும்  ஒருவரது மரணத்தின் பின்னர் அவரை விமர்சிப்பதும் வசைபாடுவதும் நாகரிகமான செயல் அல்ல ஆனால்என்ன செய்வது சில வேளைகளில் சில விடயங்களை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு உள்ளதே எனவே மன வருத்தத்தோடு இந்த விடயத்தினை இங்கே சுட்டிக்காட்டுகின்றேன்.

அண்மையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணமும் அதன் பின்னே எழுந்த சோகமான சூழ்நிலையும் தமிழகத்தின் முதல்வர் என்ற வகையில்அந்த சோகத்தில் பங்கெடுக்க வேண்டியது ஈழத்தமிழர்களாகிய எமது கடமை நாங்கள் காயம் பட்டால் கணீர்விடுகின்றவர்கள் எங்கள் தமிழகத்தின் உறவுகள் மட்டுமேஎனவே அவர்கள் கண்ணீர் விடும்போது நாங்கள் வேடிக்கையாளர்களாக இருக்க முடியாது எனவே அவர்களின் சோகத்தில் பங்கெடுக்கவேண்டிய பெறுப்பு எமக்கும் உண்டுஅவர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டிய கடமை எமக்கு உண்டு எனவே நாம் தமிழக முதல்வருக்காக ஒரு கண்ணீர் அஞ்சலியினை செலுத்தி அனுதாபத்தைசெல்லுத்தியே ஆகவேண்டும் ஆனால் இங்கே நடைபெற்றது பல வினோதமான எமக்கு ஒவ்வாத சில செயற்பாடுகள்.

தமிழக முதல்வர் மரணித்த செய்தி வந்ததுதான் தாமதம் ஊடகங்கள் ஊளையிடத்தொடங்கிவிட்டன அம்மா! அம்மா! என்று அரசியல்வாதிகள் ஆயுதமாகிவிட்டனர்ஒலிவாங்கிகள் முன்னே ஒப்பாரி வைக்க அவர்களும் அம்மா அம்மா என்றுதான் ஒப்பாரி வைகின்றனர் வட மாகாண சபை ஒத்திவைக்கப்படுகின்றது உலகநாடுகள்எங்கிலும் அம்மாவுக்கு அஞ்சலி என்று கூட்டங்கள் கூடுகின்றனர் ஆனால் இவற்றையெல்லாம் பார்க்கிறபோது….,

இந்த ஜெயலலிதா யார் ?

இவரின் உன்மையான முகம் என்ன என்பதை ஈழத்தமிழர்கள் மறந்துவிட்டார்களா?

அல்லது மறைக்க நினைக்கின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது!!காரணம் எவ்வாறு கோழி குப்பைகளை கிளறி தனது குஞ்சுகளுக்கு இரையினைக்கொடுக்கின்றதோ அதுபோல சில வேளைகளிலே வரலாறுகளைக்கிளறி இளையசமுதாயத்தினை தெளிவுபடுத்தவேண்டிய கடமை எல்லோருக்குமே உள்ளது.

ஆனால் இவற்றையெல்லாம் மறந்து ஒருவரின் மரணத்தினால் அவரைபுனிதமானவராக மாற்றுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவேதான் இந்த அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா யார் இவர் ஈழத்தமிழருக்காய் குரல்கொடுத்தார் போராடினார் அம்மா அம்மா என்று அலறிக்கொண்டிருக்கும் அற்பர்களுக்கும் ஐந்திலும் பத்திலும் இருக்கும் எங்கள் தேசத்தின் மழலைகளுக்குதெளிவுபடுத்தவேண்டும்.

யார் இந்த ஜெயலலிதா முதலில் அம்மா என்ற வார்த்தைக்கு இவர் பொருத்தமானவரா?

அப்படி என்னதான் செய்தார்?

அம்மா என்றால் என்ன அர்த்தம்தெரியாதவர்களுக்கு ஒரே ஒரு உதாரனம் அன்னை பூபதி தன் தேசத்தின் பிள்ளைகள் வாழவேண்டும் என்பதற்காய் தன்னையே பட்டினியால் வேகவைத்தஒரு தாய் அதுதான் தாய்மை!!

ஆனால். இந்த ஜெயலலிதா அம்மா என்ற வார்த்தைக்கு பொருத்தமானவரா !!

இதற்குமேலும் அம்மா என்ற வார்த்தையினை கேவலப்படுத்த முடியுமா?

17-1-2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் – ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்” என்றும் குறிப்பிட்டார். ஆனால் இப்படிப்பட்ட ஒருவரை எப்படி அம்மா  என்றும்எங்கள் தலைவி என்றும் கூறமுடியும்.

16-4-2002 அன்று, அ.தி.மு.க. ஆட்சியிலே, இதே தமிழகச் சட்டப் பேரவையிலே இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது.ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரகாரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதி யோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் ஜெயலலிதாதான்!…பொதுவாக எந்த மனிதனின் இறப்பும் வருத்திற்குரியதே அதிவேளை ஒருவர் இறந்துவிடடார் என்பதற்காக பொய்யாக்கப் புகழ் பாடவேண்டும் என்றில்லை.

இவை மட்டும் அல்ல இன்னும் நிறைய ஆதாரங்கள் இவற்றையெல்லாம் இங்கே முன்வைப்பதற்கான காரணம் அவரது மரணத்துக்காய் பலரும் பலதரப்பட்டஅனுதாபங்களை செலுத்துகின்றனர் ஆனால் அவருடய உன்மையான முகம் இங்கே வரலாற்றில் மறைக்கப்பட்டுவிடக்கூடாது.

ஜூலை 1991:ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ தமிழகத்தில்இருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் இந்த அம்மா.

1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச அம்மா, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார் இன்றுவரை அந்த தடை நீக்கப்படவில்லை.

1992-தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாஸ், பண்ருட்டி ராமச்சந்திரன்,  ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு இதே அம்மா .அரசால் கைது செய்யப்பட்டனர்.

1993-புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார். இதே அம்மா

1993மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்.

என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.2002புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என அம்மா கொக்கரித்தார். அம்மாவிம்  பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார்.

அதற்கு இந்த அம்மா‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார். இவளவு கெடுதலையும் தமிழர்களுக்கு இழைத்த ஒருவரை இன்று தூக்கி தலையில் வைத்து உத்தமி என்றும் உலகத்தமிழர்களின் தலைவி என்றும் புகளாரம்சூடுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதா?

இதைவிடக்கொடுமை யாழ்  பேரூந்து நிலையத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவசொட்டிகளிலும் பதாதைகளிலும் தெரிவிக்கப்படிருகும்இரங்கல் செய்தியிலே உலகத்தமிழினத்தின் தலைவி என்றும் வீர வணக்கம் என்றும் எழுதப்பட்டிருபது மிகவும் கண்டணத்துக்குரியது வீரவனக்கம் என்பது உன்மையான வீரர்களுக்கும் தன்னலமற்ற மனிதர்களுக்கும் மட்டுமே சொந்தமானது குறிப்பாக சொல்லப்போனால் ஈழதேசத்தின் விடுதலைக்காய் போராடிய

எங்கள் மாவீரர்களுக்கு மட்டுமே இந்த வசனம் சொந்தமானது மிகவும் பெறுமதியான இந்த வசனத்தை இதைவிட கேவலப்படுத்த முடியாது  ஜெலலலிதாவினை உலகத்தமிழர்களின் தலைவி என்று யார் சொன்னது உலகத்தமிழர்களுக்காக என்ன செய்தார்?

இறுதி நாட்களில் அதுவும் ஆட்சியினைப்பிடித்துவிடவேண்டும்என்பதற்காக ஈழத்தமிழர்களுக்காய் வெறும் தீர்மானங்களை நிறைவேற்றினார் என்பதற்காய் இவரை உலகத்தமிழர்களின் தலைவி என்று கூறினால் இங்கே மண்விடுதலைக்காய் உயிரையே தியாகம் செய்த ஒவ்வெருதமிழிச்சிகளையும் நாம் உலகத்தமிழர்களின் தலைவிகள் என்றுதானே கூறமுடியும்  பத்து பிள்ளைகளைஈன்ற எங்கள் அன்னை பூபதி தன் தேசத்தில் வாழும் அனைவரையும் தனது பிள்ளைகளாய் நினைத்து அவர்களின் எதிர்காலத்துக்காய் மட்டுநகரிலே பட்டினி கிடந்துபட்டினித்தீயிலே கருகிப்போனாள் அவள் தான் உன்மையான தாய் தாய்மை உணர்வுகொண்டவள் ஆனால் இப்படிப்பட்ட தன்னலமற்ற தீயாகிகள் பிறந்தமண்ணிலேவெறும் அரசியல் நலங்களுக்காய் வாழ்ந்த ஒருவரை அம்மா என்று கூறுவது எம்மை பெற்ற தாயை கேவலப்படுத்துவதே ஆகும்.

ஒரு முதல்வர்என்றவகையிலேஒருகண்ணீர்அஞ்சலிஒருஅனுதாபம் செலுத்தவேண்டிது எமது கடமை உரிமை ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இவர் இழைத்தஅநீதிகள் அனைத்தையுமே இவரது மரணத்துடன் மரனிக்கச்செய்யவேண்டும் என்று நினைப்பதும் அதற்கு துணைபோவதும் முறையல்ல தியாகிகள் தியாகிகளாகவும்துரோகிகள் துரோகிகள் ஆகவும் வரலாற்றிலே பிரதிபலிக்ப்படவேண்டியவர்கள் எனவே உன்மைகளை மறைத்து ஒருவரது மரணத்தால் அவரை புனிதப்படுத்துவதுமுறையல்ல..

-ஆதி

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit