புதிய பிளாக்பெரி அன்ரோயிட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் வெளியாகியது!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அதி உயர் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை உருவாக்குவதில் கைதேர்ந்த நிறுவனமாக பிளாக்பெரி விளங்குகின்றது.

இந் நிறுவனம் முன்னர் பிரத்தியேக இயங்குதளங்களைக் கொண்ட கைப்பேசிகளையே அறிமுகம் செய்து வந்தது.

எனினும் தற்போது பிரல்யமாகவுள்ள அன்ரோயிட் கைப்பேசிகளை வடிவமைக்கும் பணியில் அண்மையில் காலடிபதித்தது.

இந்நிலையில் BlackBerry Mercury எனும் புதிய அன்ரோயிட் கைப்பேசி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இக் கைப்பேசி தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

4.5 அங்குல அளவுடைய திரையினைக் கொண்ட இக் கைப்பேசியில் Qualcomm Snapdragon 821 Processor காணப்படுவதுடன், பிரதான நினைவகமாக 3GB RAM தரப்பட்டுள்ளது.

மேலும் 18 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் QWERTY கீபோர்ட் தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

எனினும் இக் கைப்பேசியின் சேமிப்பு நினைவகம், விலை உட்பட ஏனைய தகவல்கள் வெளியாகவில்லை

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*