பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

violence

யாழ்.மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில், வட மாகாணத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்று வேம்படிச் சந்தியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது, கடந்த மாதம் 24ஆம் திகதி நாகர்கோவில் பகுதியில் காணாமற் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாயின் கொலை செய்யப்பட்டமை மற்றும் கடந்த 27ஆம் திகதி பூம்புகார் பகுதியில் 17 வயது சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டே இப் போராட்டம் நடைபெற்றது.

‘பாலியல் கல்வி என்பது வாழ்க்கைப்பாடம். தயக்கத்தை விட்டு கற்றுக்கொள்வோம், பாலியல் பலாத்கார குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கக் கோருகிறோம், என் உரிமைகளை ஏன் நீங்கள் வன்முறைப்படுத்துகிறீர்கள், பெண்களின் பாதுகாப்புக்கு பதில் கூறுபவர்கள் யார்? என்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit