கூகுள் மேப்பை தோற்கடிக்குமா ஆப்பிளின் இந்த திட்டம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மேப் தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு தகவல்களை சேகரிக்க வானூர்தி (drones)யை பயன்படுத்தும் விடயத்துக்கு அனுமதி வாங்கியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மேப் விடயத்தில் எப்போதும் கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப்புடன் போட்டி போட்டு கொண்டிருக்கும்.

இதனிடையில் மேப் தகவல்களை வாடிக்கையாளார்களுக்கு இன்னும் தரமாக தரும் நோக்கில் Federal Aviation Administration (FAA) அமைப்பிடம் பறக்கும் வானூர்திகள் (drones) மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், போக்குவரத்து போன்ற முக்கிய தகவல்கள் சேகரிக்க ஆப்பிள் அனுமது வாங்கியுள்ளது.

இதன் மூலம் ஆப்பிளின் iOS and macOS போன்ற சாதனங்களில் ஆப்பிள் மேப்பின் தரம் உயரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

அந்த பறக்கும் வானூர்த்திகள் மூலம் கிடைக்கும் தகவல்களை ஆப்பிள் உடனுக்குடன் ஆப்பிள் மேப்பில் பதிவேற்றி அதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பல தகவல்களை எளிதாக கிடைக்க செய்ய இருக்கிறது.

கூகுள் மேப்களுக்கு போட்டியாக கடந்த 2012 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இந்த ஆப்பிள் மேப் சேவையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*