ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

10-1410338018-pulse1

ஆரோக்கியமான உறவிற்கு தேவையானது பாதுகாப்பான உடலுறவு. இருப்பினும் ஆணுறை பயன்படுத்துவதை சில ஆண்கள் தவிர்த்து வருகின்றனர். ஆணுறையின் மீது எப்போதுமே ஆணுகளுக்கு வெறுப்பு தான். அது ஒவ்வொரு பெண்களுக்கும் தெரியும். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக ஆண்களை ஆணுறை பயன்படுத்த வைப்பதும் கஷ்டம் தான். ஆணுறையை தவிர்ப்பதற்கு ஆண்கள் பல சாமார்த்தியமுள்ள சாக்கு போக்குகளை கூறி வருகின்றனர்.

ஆணுறை மட்டும் கட்டாயம் இல்லை என்ற நிலை வந்தால், கண்டிப்பாக ஆண்கள் ஆணுறையை பயன்படுத்த மாட்டார்கள். ஆனால் இப்போதுள்ள பெண்கள் எல்லாம் தைரியத்துடன் அதிகாரத்துடன் செயல்படுவதால், அவர்களின் முகத்திற்கு நேராக முடியாது என ஆண்களால் கூற முடிவதில்லை. அதனால் அதற்கு சாமர்த்தியமான வழிகளை கையாளுகின்றனர். ஆணுறை என்பது உடலுறவு இன்பத்திற்கு தேவையற்ற இடைஞ்சல் என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். அதனை தவிர்க்க அவர்கள் கூறும் காரணங்கள் புத்திசாலித்தனமாகவும் இருக்கிறது.

ஆண்கள் ஆணுறை அணியவில்லை என்றால், அவர்களிடம் உடலுறவில் ஈடுபடும் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் பெண்கள் மற்றும் கர்ப்பமாகி விட்டால், அவர்களை முதலில் குறை கூறுவதும் ஆண்களாக தான் இருக்கும். பெண்களுக்கு உண்டாகும் STD பிரச்சனைகளுக்கும் அவர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள். அதனால் பெண்களின் பாதுகாப்பும் வருங்காலமும் ஆண்கள் ஆணுறை பயன்படுத்துவதில் தான் இருக்கிறது. சரி அதனை பயன்படுத்தாமல் இருக்க, அப்படி என்ன காரணங்களை தான் ஆண்கள் அடுக்குகிறார்கள் என பார்க்கலாமா?

பிளாஸ்டிக் உணர்வு

ஆணுறை பயன்படுத்துவதால் ஏற்படும் பிளாஸ்டிக் உணர்வு உடலுறவின் சுகத்தை முழுமையாக அழித்து விடுகிறது என்பது பல ஆண்கள் கூறும் காரணமாகும். அதனால் ஆணுறை இல்லாமல் தொடர பெண்களை அவர்கள் சமாதானப்படுத்த முயல்வார்கள்.

பாதுகாப்பான நாட்கள் தானே?

பாதுகாப்பான நாட்கள் தான்; ஆனால் STD பற்றி நீங்கள் கேள்வி பட்டதில்லையா ஆண்களே? பெண்களுக்கு பாதுகாப்பான நாட்கள் இருக்கிறது என்பதை காரணம் காட்டி ஆண்கள் ஆதாயம் தேட முயல்வார்கள். இதனால் அவர்கள் அந்த நாட்களில் ஆணுறை பயன்படுத்த வேண்டியதில்லை பாருங்கள்.

ஆணுறையும் கூட தோற்று போகும்

ஆணுறைகள் 3% தோல்வி வீதத்தை கொண்டுள்ளது. ஆனால் ஆண்கள் அந்த வீதத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். இதை ஒரு காரணம் காட்டி, என்ன தான் பாதுகாப்பாக இருந்தாலும், அது கடவுள் கையில் தான் உள்ளது என தத்துவமும் பேசுவார்கள்.

ஏன் மாத்திரை எடுத்துக் கொள்ள கூடாது?

ஆனால் STD-க்கு எதிராக மாத்திரைகள் பாதுகாப்பை அளிக்காது தானே? மேலும் அதில் 20% தோல்வி வீதமும் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த சூட்டில் இருக்கும் ஆணிடம் இதை கூறி பாருங்கள்; கண்டிப்பாக அவருக்கு காது கேட்காது.

அனுபவிக்க முடியாது

இந்த அனைத்து பொய்யான சாக்குகளுக்கு பிறகு, பெண்களின் திருப்தியின் மீது அக்கறை உள்ளவரை போல் ஆண்கள் நடிப்பார்கள். ஆண்கள் ஆணுறை அணிந்து கொண்டால், பெண்களால் முழுமையான திருப்தியை அடைய முடியாது என்றும் நம்ப வைப்பார்கள்.

என்னால் என்னை கட்டுப்படுத்த முடியும்

உங்களால் முடியலாம், ஆனால் உங்கள் கட்டுப்பாடுகளின் தரத்தின் மீது சோதனை மேற்கொள்வது நல்லதாகும். தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்ற பெரிய ஈகோவை ஆண்கள் கொண்டுள்ளனர். அதனால் விந்தணு வெளிப்படும் வேளையில் தங்கள் ஆணுறுப்பை வெளியே எடுத்து விடுவதாக மார்த்தட்டி கொள்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்வகையான விஷயங்களை சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம்; செய்வதற்கு???

நான் உன்னை உண்மையிலேயே காதலிக்கிறேன்; நாம் சேர்ந்தே இருக்க வேண்டும்

‘காதல்’ மற்றும் ‘பாதுகாப்பான உடலுறவு’ ஆகிய இரண்டும் தனித்தனி கருத்துக்கள் ஆகும். ஆனால் ஆணுறை பயன்பாட்டில் இருந்து தப்பிக்க வேண்டி வரும் போது, ஆண்கள் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்திடுவார்கள்.

இந்நாட்களில் ஆணுறையின் விலைகள் அதிகரித்துவிட்டது

என்னங்க இது; கண்டிப்பாக குழந்தையை வளர்க்கும் செலவை விட அல்லது கரு கலைப்பு செய்யும் செலவை விட ஆணுறையின் செலவு குறைவு தான்.

அவசர கால கருத்தடைப் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம்

சில நேரங்களில் புத்தியில்லாமல் பைத்தியகாரத்தனமாக ஆண்கள் நடப்பார்கள். இயல்பாக பயன்படுத்தும் கருத்தடை தோல்வியில் முடியும் போது அவசர சூழ்நிலைகளுக்கு மட்டும், காலை நேரத்திற்கு பின் இந்த மாத்திரைகள் உண்ண வேண்டும் என்பதை யாராவது அவர்களுக்கு விரிவாக சொல்லுங்களேன். நினைத்த நேரம் இந்த மாத்திரைகளை விழுங்க முடியாது.

என் மீது நம்பிக்கை இல்லையா?

உங்கள் ஆணிடம் பாதுகாப்பைப் பற்றி பேச தொடங்கினால், உடனே நம்பிக்கை பற்றிய பிரச்சனையாக்கி விடுவார்கள். இந்த பிரச்சனையை இழுத்தால் அதற்காக நீங்கள் ரொம்பவும் வருத்தப்படாதீர்கள். ஆணுறையை தவிர்க்கவே இந்த சீனெல்லாம் போடுகிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit