இந்தியா-ஆப்கான் இடையில் வான்வழி வர்த்தகம்..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் தங்களுக்கிடையில் சரக்கு விமானச் சேவையை அறிவிக்கவுள்ளன. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் இருக்கும் பாகிஸ்தானுடன் அவ்விரு நாடுகளின் உறவு பதற்ற நிலையில் இருப்பதால் இந்திய-ஆப்கான் வர்த்தகம் பாதிக்கப்படுவதாக அந்நாடுகள் கூறுகின்றன.

பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நகர் அம்ரிட்சரில் அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியும் ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கனியும் சந்தித்தனர். ஆப்கானிஸ்தானை நிலைப்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட “ஆசியாவின் இதயம்” என்ற மாநாட்டிற்காக அவ்விரு தலைவர்கள் சென்றிருந்தனர்.

எப்பக்கமும் நிலம் சூழ்ந்துள்ள ஆப்கானிஸ்தானுக்கும் முக்கிய உலகச் சந்தைகளுக்கும் இடையிலான போக்குவரத்துத் தொடர்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் சரக்கு விமானச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதக் குழுவை எதிர்த்துப் போரிடும் நேரத்தில் பொருளியலையும் வளர்க்க முனைகிறது ஆப்கானிஸ்தான். பாகிஸ்தான் நிலப்பகுதி வழி ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு பொருள்கள் அனுப்பப்படுகின்றன.
அனுப்பப்படும் பொருட்களின் அளவு மீது பாகிஸ்தான் வரம்பு விதிக்கிறது. அந்தப் பகுதியில் ஆப்கானிஸ்தானுக்கான இந்திய ஏற்றுமதிகளைப் பாகிஸ்தான் அனுமதிப்பதில்லை. இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக வாய்ப்புகள் ஏராளமாக இருப்பதால் வான்வழியாக வர்த்தகம் செய்ய இரு நாடுகளும் முடிவெடுத்ததாகப் பொருளியல் கொள்கைக்கான ஆப்கானிய அதிகாரி காலிட் பயேந்திரா தெரிவித்தார்.

மாநாடு நேரத்தில் பாகிஸ்தானிய அதிகாரிகளுடன் எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*