இரண்டாவது நாளாக தொடரும் பகிஸ்கரிப்பு போராட்டம் – மக்கள் பெரும் சிரமம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு 25000 ரூபா தண்டபணம் அறவிடப்படும் என 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது.

குறித்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்றும் இன்றுமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் காரணமாக கொழும்பு உள்ளிட்ட நாடு முழுவதிலும் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததுடன், தொழிலுக்கு செல்பவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட அனைத்து மக்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

ஜனாதிபதி பேச்சுவார்ததைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதினை அடுத்து பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை விலக்கி கொள்வதாக தனியார் பேருந்து சங்கம் அறிவித்திருந்தது.

இருப்பினும் இன்றும் கூட கொழும்பில் தனியார் பேருந்துகள் கடமையில் ஈடுபட்டதாக தெரியவில்லை, இவ்வாறிருக்க மக்கள் இன்றும் பயணங்கள் செய்வதில் பல பாதிப்புக்களுக்கு முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*