
ஹவானா: உலகில் முதுபெரும் அரசியல் தலைவரும், கியூபாவின் முன்னாள் அதிபருமான மறைந்த பிடல் காஸ்ட்ரோவிற்கு லட்சக்கணக்கான மக்கள் ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையோட்டி காஸ்ட்ரோவின் ஆதரவாளர்கள் தலைநகர் ஹவானாவில் பிரமாண்ட பேரணி நடத்தினர். கியூபாவின் தேசிய கீதத்துடன் தொடங்கிய இந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர்.
வெனிசுலா அதிபர் நிக்கோஸ் மதுரோ, பொலிவியா அதிபர் ஈவோ மொராலஸ் உள்ளிட்ட உலகத்தலைவர்கள் காஸ்ட்ரோவிற்கு அஞ்சலி செலுத்த ஹவானாவில் கூடியுள்ளனர்.பிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகரமான வாழ்க்கை, வல்லரசு எதிர்த்து அவர் நடத்திய வரலாற்று போர் ஆகியவை இந்த அஞ்சல் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மத்தியில் திரையிடப்பட உள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டுள்ளதால் புரட்சி சதுக்கம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.