வாயைப் பிளந்த அமைச்சர் பட்டாளம்! கடுப்பான மகிந்த

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையினை ஜனாதிபதி சபையில் சமர்ப்பித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமரும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவும் வாயைப் பிளந்து வானத்தைப் பார்த்த நிலையில் ஆழ்ந்திருந்ததாக ஜக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா கூறியதையடுத்து நேற்று சபையில் சர்ச்சை நிலவியது.

இதன் போது சபையில் நித்திரை கொள்வது அமைச்சர்கள் எம்.பி.க்கள் என இரு தரப்பினருக்குமே பொருந்துகிறது என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். இதேவேளை அமைச்சர்களும் எம்.பி.க்களும் சபைக்கு நித்திரை கொள்வது இயல்பானதுதான் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை அமர்வின் போது 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அஜித் பி.பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்ததையடுத் சர்ச்சை உண்டானது.

வரவு செலவுத் திட்ட உரை சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் தி.மு. ஜயரத்ன மற்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் வாயைப் பிளந்து கொண்டு வானத்தை நோக்கியவாறு ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர் என்றார்.

அஸ்வர்

இதன்போது ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் பிரதமர் மற்றும் சபை முதல்வரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகிய இருவரும் இச்சபையின் முக்கியஸ்தர்கள் ஆவர். அவர்கள் குறித்து இவ்வாறு கூற முடியாது என்பதுடன் உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் இத்தகைய கூற்று நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் ஹன்சாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று பிரதி சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

சிரித்துக் கொண்டிருந்த அமைச்சர்

உறுப்பினர் அஜித் பி. பெரேராவின் கூற்றுக்களையும் உறுப்பினர் அஸ்வரின் வாதங்களையுயம் அவதானித்துக் கொண்டிருந்த அமைச்சர் ஜோன் செனவிரட்ன சிரித்தவாறு அமர்ந்திருந்தார்.

இதனையடுத்து நிலையியற் கட்டளைகளுக்கு முரணான விடயங்கள் கூறப்பட்டிருப்பின் அவற்றை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறு கட்டளையிடுவதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார்.

ஆதாரத்தைக் காட்டினார்

இதன் போது குறுக்கிட்ட அஜித் பி. பெரேரா எம்.பி நிலையியற் கட்டளைகளுக்கு விரோதமாக நான் இங்கு எதனையும் கூறவில்லை என்று தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையின் போது பிரதமரும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் ஆழ்ந்த நித்திரையிலிருந்ததை ஆங்கிலப்பத்திரிகை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது என்று கூறி குறித்த ஆங்கிலப் பத்திரிகையையும் சபைக்கு காட்டினார்.

இதன் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றையும் எழுப்பிய அமைச்சர் ஜோன் செனவிரட்ன கூறுகையில் உறுப்பினர் அஜித் பி. பெரேரா விடயதானங்களுடன் உரையாற்றக் கூடியவர். எனினும் தற்போது பிரதமர் குறித்தும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறித்தும் அவர் இங்கு கூறுவது பொருத்தமற்றதாக உள்ளது.

எனினும் நீண்ட நேர உரையொன்று நிகழ்த்தப்படும் போதே இவ்வாறு நித்திரையாவது இயல்பானதே என்றார்.

இதேவேளை பாராளுமன்றத்தில் நித்திரை கொள்வது அமைச்சர்களுக்கும் எம்பிக்களுக்கும் பொருத்தமானதே என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*