புலிக்கொடியில் மறைந்திருக்கும் இரகசியங்கள் உங்களுக்கு தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டு மொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது.

விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகப்பகுதி எங்கும் தேசியக் கொடியாக புலிக்கொடி பறந்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் சிந்தனையில் புலிக்கொடி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

புலிக் கொடிக்குள் மறைந்திருக்கும் இரகசியங்களை ஆராய்வோமானால் அடக்கு முறை வளையத்தை தண்டி புலி சீற்றம் கொண்டு பாய்கின்றது.

அதனுடைய கால் நகங்கள் பத்தும் ஒவ்வொரு தமிழ்த்தாயும் தமது புதல்வர்களை பத்து மாதம் சுமந்து பெற்றுள்ளார்கள். அவர்கள் வீரமுடையவர்கள் என்று அர்த்தம்.

பற்களின் எண்ணிக்கை பதினொன்று தேசிய மாவீரர் நாள் மாதத்தை குறிக்கும்.

புலியினுடைய 12 மீசை மயிர்களும், வருடத்தில் 12 மாதங்கள் தமிழ்மக்களுக்காக உழைத்தல் என்று அர்த்தம்.

அத்துடன் புலிக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.

தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விளைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும்.

தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.

தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்து விடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ள முடியாது.

தமிழீழக் சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்பட வேண்டும்.

பெண்ணடிமைத்தனம் நீக்கப்பட வேண்டும். இதற்குக் சமுதாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

சமமின்மையும் சமதர்மமும் சமுதாய நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும்.

இத்தகைய புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

விடுதலைப்பாதை கரடுமுரடானது சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது.

இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்.

அசையாத நம்பிக்கை வேண்டும். தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.

விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*