பிரித்தானியாவில் குடியேறியுள்ள அகதிகளுக்கு ஓர் நற்செய்தி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக வேண்டும் என நாடு முழுவதும் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் 52 சதவிகித மக்கள் விலக வேண்டும் எனவும், 48 சதவிகித மக்கள் உறுப்பின நாடாக பிரித்தானிய தொடர வேண்டும் எனவும் வாக்களித்தனர்.

ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என பெரும்பான்மை கிடைத்துள்ளதால் பிரித்தானிய உறுப்பின நாடு என்ற அந்தஸ்த்தை இழந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக நேரிட்டால், அந்நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களுக்கு பெரும் இழப்பீட்டை ஏற்படுத்தும்.

ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பிரித்தானிய நாட்டில் உள்ள அகதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மூலம் பல சலுகைகள் கிடைக்கும்.

ஆனால், பிரித்தானிய விலகி வந்து தன்னாட்சியை ஏற்படுத்தினால், அந்நாட்டு அரசு அனுமதிக்கும் அகதிகளை மட்டுமே உள்ளெடுக்க முடியும்.

இதில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட முடியாது. மேலும், அகதிகளுக்கான சலுகைகளும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

இதுபோன்ற ஒரு சூழலில் தற்போது பிரித்தானியாவில் உள்ள வெளிநாட்டினர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பெல்ஜியம் நாட்டு முன்னாள் பிரதமரான Guy Verhofstadt என்பவர் வெளியிட்டுள்ள தகவலில் ‘ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக மறுக்கும் 48 சதவிகித மக்களுக்கான உரிமையை இழக்க கூடாது.

இந்த 48 சதவிகித மக்கள் அனைவரும் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது, இவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தொடர்ந்து நீடிப்பதற்கு தனிநபர் குடியுரிமையை(Individual EU Citizenship) பெற வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் இதற்கான கட்டணத்தை செலுத்தினால் அவர்கள் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் குடிமகனாக நீடிக்கலாம்’ என Guy Verhofstadt தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்கான கோரிக்கையை பிரஸ்சல்ஸ் உயர் அதிகாரிகளிடம் விடுத்துள்ளதாகவும், இதனை நிறைவேற்ற கூடுதல் அழுத்தம் தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*