கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் 2 மாவோயிஸ்ட்கள்..!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்களில் 2 பேர் சென்னை அம்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மாவோஸ்ட்களின் நடமாட்டம் உள்ளதா? என க்யூ பிரிவு போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.

மேற்கு வங்கம், சத்தீஷ்கர் உட்பட சில மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் உள்ளது. இவர்களை ஒடுக்க மத்திய அரசு மாநில போலீஸா ருடன் இணைந்து அதிரடி நடவடிக் கைகளை அவ்வப்போது மேற் கொண்டு வருகிறது. கேரளா மற் றும் ஆந்திர எல்லையோர மாவட் டங்களில் மாவோயிஸ்ட்கள் அவ் வப்போது திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் கோவை, நீலகிரி, சேலம் மாவட்டங் களில் எல்லையோர போலீஸார் விழிப்புடன் இருப்பார்கள்.

இந்நிலையில் நீலகிரி அருகே கேரள மாநில எல்லைக்கு உட்பட்ட நிலம்பூர் வனப் பகுதியில் பதுங்கி இருந்த ஒரு பெண் உட்பட 3 மாவோஸ்ட்களை கேரள போலீஸார் நேற்று முன்தினம் சுட்டுக் கொன்றனர்.

பலியான பெண் மாவோயிஸ்ட் பெயர் காவேரி என்கிற அஜிதா(45) என்பதும், மற்றொரு மாவோயிஸ்ட் பெயர் குப்புசாமி என்ற குப்பு தேவராஜ்(60) என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் பற்றி விசாரணை நடக்கிறது.

கேரள போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த நிலம்பூர் வனப்பகுதி, தமிழக எல்லைக்கு அருகில் உள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் மாவோ யிஸ்ட்கள் நடமாட்டம் உள்ளதா? என க்யூ பிரிவு போலீஸார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

க்யூ பிரிவு டிஐஜி ஈஸ்வர மூர்த்தி, எஸ்பி சேவியர் தன்ராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தனிப் படையினர் கேரள மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும், சென்னை அம்பத்தூர், கிருஷ்ண கிரிக்கும் தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழக க்யூ பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் மாவோ யிஸ்ட் காவேரி சென்னை அம்பத் தூரைச் சேர்ந்தவர். இவர் அம்பத்தூ ரில் பள்ளிப் படிப்பை முடித்து சென்னையில் உள்ள மகளிர் கல்லூரி ஒன்றில் பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

சிறு வயதிலேயே மாவோயிஸ்ட் இயக்கம் மீது பற்று கொண்ட காவேரி, திருமணம் செய்து கொள்ளவில்லை. மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்து கர்நாடக மாநில வனப் பகுதிகளில் பதுங்கி இருந்து செயல்பட்டுள்ளார்.

போலீஸாரின் தாக்குதலில் பலியான மற்றொரு மாவோயிஸ்ட் குப்புசாமி கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு மதுரை யில் நடந்த வங்கி வழிப்பறியில் கைது செய்யப்பட்ட குப்புசாமி, பின் னர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அதன்பிறகு தலைமறைவாக இருந் துள்ளார். இந்நிலையில்தான் அவரும் பலியாகியுள்ளார். இவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் மூத்த தலைவராகவும் செயல்பட்டுள் ளார். கேரளம், கர்நாடகம், தமிழக போலீஸாருக்கு பெரும் சவாலா கவே குப்புசாமி இருந்துள்ளார். இதனால், இவரது தலைக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகையும் ஏற் கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து விசாரணை நடை பெற்று வருகிறது” என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*