ஜனாதிபதி மைத்திரியை எச்சரிக்கும் சிங்களப் பெண் – (காணொளி இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உனது ஆட்சியில் சிங்களவர்களை ஏலம் போட வேண்டாம் என சிங்களப் பெண் ஒருவர் ஜனாதிபதியை அவதூறு வார்த்தைகளால் எச்சரிக்கும் காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

அந்த காணொளிப்பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,

நான் இங்கு கதைப்பது எமது நாட்டு மக்களுக்காக, பெண்ணாகிய எமது உடலில் இருக்கும் இரத்தம் ஆண்களை விட அதிகம் என்பதால் நான் கதைக்கிறேன். நான் இதனை குறிப்பிடுவது முதுகெலும்பில்லாத மைத்திரிபால சிறிசேன உனக்கு.

உனக்கு இந்த நாட்டை ஆட்சி புரியத் தெரியவில்லையாயின் நான் ஆட்சி புரிகிறேன். உன்னை விட இந்த நாட்டை நன்றாகவே ஆட்சி செய்வேன்.

ஆனால் உனது ஆட்சியால் நாட்டை கூறுபோட வேண்டாம். சிங்களவர்களை ஏலம் போட வேண்டாம், நீ இலஞ்சம் வாங்கிக் கொண்டு நீ வளைந்து கொடுத்து கொண்டு எமது நாட்டு புத்த பிக்குகளை நாய் போல நீ நடத்துகின்றாய்.

முதுகெலும்பில்லாத அனைவரும் ஒன்று சேர்ந்து புத்த பிக்குகளை நாய் போல நடத்துகின்றீர்கள். அது ஏன்? நீ எங்கள் நாட்டில் பிறந்தது நாட்டுக்கு வந்த பாவக்கேடு, மற்றும் நுண்ணங்கி.

இது எமது சிங்கள நாடு. இதை நீ புரிந்து கொள் மைத்திரிபால சிறிசேன. உனக்கு நாட்டை ஆட்சி புரியத் தெரியாது என்றால் நல்ல ஒருத்தனுக்கு இந்த நாட்டை ஆட்சி புரியக் கொடு. இல்லாவிடின் எனக்குத் தா நான் உனக்கு நாட்டை எப்படி ஆட்சி புரிவது என்பது சொல்லித் தருகிறேன்.

நீ நாட்டை ஆட்சி புரிவது என்பதன் பெயரில் நாட்டை நாசமாக்குகிறாய். நீ ஆட்சி செய்வதால் அப்பாவி மக்கள் வாழ்க்கை படுகுழிக்குள் போய்க் கொண்டே இருக்கின்றது.

எமது பௌத்தாகமத்தையே அடிமட்டத்துக்கு கேவலப்படுத்துகிறாய். இது தான் நீ நடத்தும் நாடகம். உனக்கு சிங்கள இரத்தம் இல்லாமற் போகக் கூடும்.

நீயும், ரணிலும் சேர்ந்து கொண்டு இந்த நாட்டையே நாசமாக்க வேண்டாம். மக்கள் இப்போது கொதித்துப் போய் இருக்கிறார்கள்.

இதெல்லாம் நடந்தது உன்னால் தான். நான் பயப்பட மாட்டேன். உன்னால் முடிந்தால் என்னை கொலை செய். நீ என்னை கொன்று போட்டாலும் எனக்கு பயமில்லை.

எமது நாட்டு மக்களுக்காக எனது உயிரைக் கூட மாய்ப்பேன். சிங்கள இனத்தை நாசமாக்காமல் சும்மா இருந்தால் போதும். உனக்கு நல்லதுக்கு சொல்லுகிறேன்.

பெண்கள் ஒன்று சேர்ந்து தான் உன்னுடைய வாழ்க்கையை நாசமாக்குவார்கள், ஞாபகத்தில் வைத்துக் கொள் என்று இந்த காணொளிப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*