29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு அனுமதி!!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

யாழ்.குடா நாட்டில் சுகாதாரமான முறையில் இயங்கும் 29 ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அனுமதி வழங்கியுள்ளது.

ஐஸ்கிறீம் விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்களில் தரமான சுகாதாரம் பேணப்படவில்லை என பரிசோதனையின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இயங்குவதற்கு தற்காலிகமாக அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும் தற்போது பயிற்சிகள் மற்றும் தொழிலாளர்களது பொருளாதார பாதிப்பு என்பனவற்றின் அடிப்படையில் சுகாதார நடைமுறைகள் பேணுமாறு அறிவுறுத்தப்பட்டு இன்று முதல் மீண்டும் இயங்க 29 விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுத்தப்பட்டவர்களில் ஏனையவர்களுக்கும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் எதிர்வரும் காலங்களில் அச்சமின்றி ஐஸ்கிறீம் பருக முடியும் என்றும் சுகாதார பணிமனை அறிவித்துள்ளது.

அத்துடன் அனுமதி கிடைக்காதவர்கள் அனுமதி கிடைத்தவர்களிடம் ஐஸ்கிறீமைப் பெற்று சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit