அரசிலிருந்து விலகுமாறு மு.கா. தலைமைக்கு அழுத்தம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அரசாங்கத்தை விட்டு விலகி பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு கட்சி உறுப்பினர்கள் அழுத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் ஒன்றயை மேற்கொண்டிருந்தார் அதன்போதே கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் மேற்கணடவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விஜயத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அரசாங்கம் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்காத காரணத்தினால், ஆளும் கட்சிக்கான ஆதரவினை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதனால் கட்சியின் வாக்கு பலம் வீழ்ச்சியடையக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும் கட்சி என்ற ரீதியில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் எனவும் அரசாங்கத்தைக் கொண்டு அபிலாஸைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் தொடர்ச்சியாக அரசாங்கம் மெத்தனப் போக்கைப் பின்பற்றினால் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுப்பது குறித்து கவனம் செலுத்த முடியும் என அமைச்சர் ஹக்கீம் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*