குழந்தை பிறந்ததும் மன உளைச்சலில் தற்கொலை செய்த தாயார்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கனடா நாட்டில் முதல் குழந்தையை பெற்றெடுத்த தாயார் ஒருவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள New Westminster நகரில் Kim Chen மற்றும் Florence Leung(32) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.சுக பிரசவமாக இருந்தாலும் கூட குழந்தை பிறந்த நாள் முதல் தாயார் சோகமாகவே இருந்துள்ளார்.மேலும், கணவருடன் பேசும்போது ஒருவித மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதுபோன்ற ஒரு சூழலில் கடந்த அக்டோபர் 25-ம் திகதி தாயார் திடீரென காணாமல் போயுள்ளார். கணவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத காரணத்தினால் இது குறித்து பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.மேலும், தாயார் பற்றிய தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன் தினம் Bowen தீவிற்கு அருகில் தாயார் ஓட்டிச்சென்ற கார் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது தண்ணீரில் தாயார் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் பேசியபோது, ‘இதில் சதி வேலை இருப்பதாக தெரியவில்லை. குழந்தை பிறந்த பிறகு தாயார்களுக்கு ஏற்படும் ஒருவித மன உளைச்சலை தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குழந்தை பெற்ற 3 மாதங்களுக்குள் தாயார் தற்கொலை செய்துள்ள சம்பவம் அந்நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*