தமிழ் அரசியல் தலைவர்களுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் வழிகாட்டல் அவசியம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

unnamed-450

தாயகத்தில் ஆயுதங்கள் மௌனித்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இன்னமும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையிலான முயற்சிகள் எவையுமே செயல் வடிவம் பெறாதநிலையும், நல்லிணக்கம் என்ற வார்த்தைக்கு நடைமுறை ரீதியாக செயல் வடிவம் கொடுக்கப்பட வேண்டிய அவசர, அவசிய தேவைப்பாடுகள் உணரப்படாத நிலையும் காணப்படுகின்றது.
6d3cb2ea1747fd6e0dccc2b518a165ed
இப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வும் அவசியமாது என்ற விடயம் கருத்தில் எடுக்கப்படாமல் இனங்களுக்கிடையில் குரோத உணர்வு வலுப்பெறக்கூடிய வகையிலான செயற்பாடுகளை சிங்கள,பௌத்த பேரினவாத ஆட்சியாளர்கள் தாயகத்தில் மேற்கொண்டுவருகின்றனர்.
வடக்கில் இராணுவம் குவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் வலி.வடக்கு, முல்லைத்தீவின் கிழக்கெல்லைக் கிராமங்களான கொக்கிளாய்- காருநாட்டுக்கேணி- கொக்குத்தொடுவாய், கிழக்கில் சம்பூர் போன்ற பிரதேசங்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் கணிசமான அளவு நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த நில ஆக்கிரமிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைவிற்குப் பின்னர் தாயகத்தில் தடுப்பார் எவருமின்றி முனைப்புடன் இடம்பெற்று வருகின்றமையும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதுபோன்ற சிங்களத்தின் அராஜகங்கள் தாயகத்தின் இனப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ் தேசத்தின் இருப்பையே உலகவரைபடத்திலிருந்து இல்லது அகற்றிவிடக்கூடிய அபாயநிலையைத் தோற்றுவித்துள்ளது.
aa184கிழக்கில் முஸ்லீம்கள் கணிசமான அளவில் கலந்து வாழுகின்ற போதிலும் வடக்கில் தமிழ் மக்களே அதிகளவில் வசிக்கின்றனர். இந்நிலையில் வடக்கில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தில் மற்றத்தினை ஏற்படுத்தி தமிழ்த் தேசம் இருந்தமைக்கான தடயத்தையே அழக்கும் நோக்குடன் சிங்களம் செயற்பட்டு வருகின்றது. இதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேசியக் கூட்டமைப்பினர் சிங்களத்திற்கு ஆதரவாக திரைமறைவில் செயற்பட்டுவருகின்றனர்.
unnamed-450
தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களில் சிலர் மஹிந்த ராஜபக்ஷ தூக்கி வீசுகின்ற எச்சில் எலும்புத்துண்டில் அறுசுவை இன்பம் தேடுகின்ற நிலையில், தாயகத்தில் சிங்களம் நீண்டகாலத் திட்டமிடலுடன் மேற்கொண்டுவருகின்ற தமிழினச் சுத்திகரிப்பினை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
எமது உரிமைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக தேசியத் தலைவர் அதிமேதகு வே. பிரபாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பொழுது சிங்களத்துடன் திருமண, மறுமண ஒப்பந்தங்களுக்காக கைகோர்த்து, எமது விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சிங்களச் சட்டத்தின்முன் காண்பித்து திகதியிடப்படாத தமிழ் அரசியல் கைதிகளாக்கி சிறைகளில் அடைத்து சித்திரவதை செய்த ஆசாமி இன்று வடக்கின் முதலமைச்சராக, தமிழத் தேசிய உணர்வாளனாக தன்னைக்காண்பித்து தமிழ்த் தேசியத்தையும் தமிழ்த் தேசத்தையும் விலைபேசிவருகின்றார்.
வடக்கில் மாகாண ஆட்சியை நிறுவும் நோக்குடன் அறிவிக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலின் பொழுது தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடுவதற்காக எமதருமைத் தேசியத் தலைவர் உதித்த வடமராட்சி மண்ணில் நின்று எம்தலைவனின் புகழ்பாடிய விக்கினேஸ்வரன், முதல்வராகிய பின்னர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும், எமது போராளிகளையும், தேசியத் தலைவரையும், போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த பெண்களையும் வஞ்சித்து வருகின்றார்.
இதனைவிட இந்த முதலமைச்சர் வடமாகாண சபை உறுப்பினர்களையும் வஞ்சித்து தன்சார்பானவர்களில் சிலரை தனது கைப்பொம்மைகளாக்கிக் கொண்டு வடக்கின் நிர்வாகத்தையே குழப்பி வருகின்றார். இவருடைய செயல்களுக்கு தம்மை அதிமேதாபிகளாகக் காட்டிக்கொண்டு அறிவு குறைவானவன் செய்கின்ற செயல்களைச் செய்கின்ற வடக்கின் அமைச்சர்களில் சிலரும் உடந்தையாகச் செயற்பட்டுவருகின்றனர்.
images
தாயகத்தில் போரின் வடுக்களைச் சுமந்த மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளனர். இம்மக்களின் அரசியல் எதிர்காலம் என்பதற்கப்பால் இவர்களை பொருளாதார ரீதியாகத் தூக்கிவிட வேண்டும். இதற்காக தாயகத்தில் முதலீடுகளைச் செய்து தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு புலத்திலுள்ளவர்கள் முயற்சிக்கின்ற பொழுது, வடக்கின் முதல்வர் அதற்குத் தடையாக இருக்கின்றார் என்கின்ற அதிர்ச்சியூட்டுகின்ற தகவலும் அண்மையில் வெளியாகியுள்ளது.
வடக்கில் முதலிட விரும்புவோருக்கு முதலமைச்சர் அனுமதி வழங்காது, அவர்களுடன் உரையாடுவதைத் தவிர்த்துள்ளார். இதனால் பல்லாயிரக் கணக்கானவர்களின் வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க எமது தேசியப் போராட்டத்திற்கு உரமூட்டிய, தமிழனின் வீரத்திற்கு ஆதாரமாகத் திகழ்ந்த ஆயுதப் போராளிகளையும், முள்ளிவாய்க்காலில் அந்தரித்த தமிழ் மக்களையும் கவனிப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் வடக்கு மாகாண சபை இன்னமும் முன்வைக்கவில்;லை என்பதும் விக்கினேஸ்வரனின் மீதான நம்பிக்கையீனத்தை அதிகரித்துள்ளது.
இதன்வெளிப்பாடாக வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் பகிரங்கமாக விடயங்களைச் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளார். இவர் சபையில் பேசும் பொழுது பதிலளிக்க முடியாத முண்ணாணில்லாத மாகாண அமைச்சரெருவர் பொது வைபவத்தில் முறைதவறிப் பேசியதால் இன்று வடக்கு மாகாண சபையின் எதிர்காலம் சிக்கல் நிறைந்ததாக மாறியுள்ளது.
தமிழ் மக்களின் ஆணையை ஒருசிலர் துஸ்பிரயோகம் செய்வதால் சிங்களம் இலகுவில் தாயகத்தில் தமிழ் மக்களின் பூர்வீகபூமியை அபகரிக்கின்றது.
எனவே வடக்கில் மக்களின் ஆணையில் அதிகாரங்களைப் பெற்றவர்களின் துஸ்பிரயோகங்களை உடனடியாக கட்சித் தலைமைகள் தடுத்து நிறுத்தி வட மாகாண சபையின் செயற்பாடுகளை வினைத்திறனாக்க வேண்டும். முதலமைச்சர் தன்னை அதிகம் படித்த மேதை எனக்கருதிக்கொண்டு தன்னிச்சையாக சில செயல்களைச் செய்வதால் எமது தேசிய உரிமைப் போராட்டம் அழிக்கப்படுகின்றது. இதனையும் கட்சித்தலைமை உடனடியாகத் தடுத்துநிறுத்த வேண்டும்.
இதனை தமிழ்க் கூட்டமைப்பின் தற்போதய தலைமைகளால் செய்ய முடியாது என்பதும் சகலருக்கும் தெரியும்.
எனவே தேர்தல் காலங்களில் நிதியை வாரிவழங்கி தவறானவர்களும் வழிப்போக்கர்களும் வந்தான் வரத்தானும் அதிகாரத்தைப் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த புலத்தில் வசிக்கின்ற தமிழர்கள், தமிழ்க் கூட்டமைப்பு வழிதவறி தமிழ்த் தேசியத்தை வியாபாரப் பொருளாக கருதி பேரம் பேசுவதை தடுத்துநிறுத்த வேண்டும்.
எதிர்காலத்திலும் தேர்தல் செலவுகளுக்கான நிதியை வழங்குவதற்கு முன்னர் அத்தேர்தலில் தமிழ் மக்களின் நலனுக்காக யார் போட்டியிடப்போகின்றார்கள் என்பதை அவதானித்த பின்னர் நிபந்தனைகளுடன் நிதியை வழங்க வேண்டும்.
இதேபோல் தற்பொழுது களத்திலுள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியம் தொடர்பாகவும், எமது உரிமைப் போராட்டம் தொடர்பாகவும், விடுதலைப் போராளிகளின் ஒப்பற்ற ஈகங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்த வேண்டியதும் அவசியமாகும் என்பதையும் நாம் சுட்டிக்காட்டுகின்றோம்…

6d3cb2ea1747fd6e0dccc2b518a165ed unnamed-450

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit