மாவீரர் வாரம் ஆரம்பம்! தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்க ஏற்பாடு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி – களமாடி, வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கடந்த காலங்களைப் போலல்லாது தமிழர் தாயகப் பிரதேசத்திலும், மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் இம்முறை நினைவேந்தல் செய்யப்படவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் 1989ஆம் ஆண்டிலிருந்து மாவீரர் வாரம் நினைவு கூரப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து, போர்க்களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவு கூருவதற்காக நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் தாயகத்தில் இருந்தபோது, மாவீரர் வாரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வந்தது. 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழர் தாயகத்தில் இரகசியமாக ஆங்காங்கே மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஆனால், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில் உணர்வெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு தமிழர் தாயகத்திலும் பகிரங்கமாக மாவீரர் வாரம் நினைவுகூரப்படும் என்று பல அமைப்புக்களால், மக்கள் பிரதிநிதிகளாலும் அழைப்பு – அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது.

ஜனநாயகப் போராளிகள் கட்சி, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், து.ரவிகரன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*