வெட்டுப்புள்ளியைக்கடந்த கரைதுறைப்பற்றுமாணவர்கள் சிறப்பிப்பு.

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

student

2016ஆம் ஆண்டில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளியைக்கடந்த கரைதுறைப்பற்று கோட்டத்தின் மாணவர்கள் இன்று காலை சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை பத்துமணியளவில் வற்றாப்பளை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர் சிறப்பிப்பு நிகழ்வினை வற்றாப்பளையில் இயங்கிவரும் வற்றாநதி சமூக அமைப்பு முன்னெடுத்துள்ளது.

கரைதுறைப்பற்று கல்விக்கோட்டத்தில் அடங்கும் ஐம்பத்துநான்கு மாணவர்க்கும் வெற்றிப்பதக்கம் ஒன்றும் ஆங்கில-தமிழ் அகராதி ஒன்றும் கொடுக்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் முதன்மைவிருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வினை வற்றாநதி அமைப்பின் தலைவர் திரு.க.விமலதாசு அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.

இந்நிகழ்வில் தொடக்கநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு.ச.சத்தியசீலன், ஓய்வுநிலை பாடசாலை முதல்வர்கள் திரு.மு.குகதாசன், திருமதி த.சிவபாலன், மருத்துவர் இ.தேவராசா, ஓய்வுநிலை நிருவாக உத்தியோகத்தர் திரு. இ.இரட்ணராசா, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit