மாங்குளத்தில் இராணுவத்தினரின் வசமுள்ள பொதுநோக்கு மண்டபம் மக்கள் பாவணைக்கு விடப்படுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மாங்குளம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஏ-9 வீதிக்கருகில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபமானது அப்பகுதியில் மக்கள் மீளக்குடியேற்றப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரையில் இராணுவத்தினர் மக்கள் பாவனைக்கு வழங்காது பயன்படுத்தி வருகின்றனர்.

நியாப் ii திட்டத்தினூடாக 2004ம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தினை மக்களின் பாவனைக்கு வழங்குமாறு அப்பகுதி மக்களாலும் கிராம பொது அமைப்புக்களாலும் பல தடவைகள் பல்வேறுபட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் இவ்விடயம் தொடர்பாக எவரும் அக்கறையெடுத்து அப்பொதுநோக்கு மண்டபத்தினை மக்கள் பாவனைக்காக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இப்பொதுநோக்கு மண்டபத்தினை இராணுவத்தினரின் பிடியில் இருந்து விடுவித்து பொதுமக்கள் பாவனைக்கு வழங்கும்படி அப்பகுதி பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*