
தமிழீழம் என்ற தன்னிகரில்லா பொக்கிசத்தை விலை மதிப்பற்ற அற்புதத்தை , வேண்டி ஆயுதம் தரித்தும் ஆழமான சிந்தை நிறைத்தும் அல்லும் பகலும் அணிநடத்தி மண்ணுக்காய் மரணித்த மாவீரச்செல்வங்கள் நினைவுதாங்கி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 மாவீரர் வாரம் தேசியப்புதல்வர் நாளாய் மலர்கிறது.
ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் மறக்கமுடியா காவியர் மாவீரர். தன்னலமற்ற இவர் தியாகத்துக்கு ஈடுஇணை இல்லை… எம் புத்திரர்க்கான இந்த தேசிய நினைவெழுச்சி நாளை நம் வாழ்நாள் கடமையாய் ஏற்றே தொடர்கிறது ஒவ்வொரு தமிழனின் இதயமும் சாவிலும் சரித்திரம் படைத்த உத்தமர் எம் மாவீரர்கள் நினைவு தாங்கி காலத்தின் கண்ணாடியாகி கவிதைப்படையல் ஒன்றை புனிதர்க்காய் சமர்ப்பிப்பதில் கதிரவன் குழுமம் பெருமை கொள்கிறது. அதன் பணியில் தம்மையும் இணைத்து புலத்துக்கவிஞர்கள், தியாகசீலர்க்கான ஆத்மார்த்தமான கவிகளை தங்கள் தூரிகைகள் அசைவில் அருவியாய் ஊற்றெடுக்க அவையாவையும் இலட்சிய வரிகளாய் இங்கே சமர்ப்பணமாக்குகிறது…
புறனானூற்று வீரர் தம் ஈகம் மாவீரச்செல்வங்களுக்கான கவிதாஞ்சலி சமர்ப்பணம 2016
கடந்த வருட வீரம் பறைசாற்றும் ஈகம் மாவீரச் செல்வங்களுக்கான கவிதாஞ்சலி
வித்தகரே உம்பணிக்கு விலை மதிப்புண்டோ…… கவி-புபிகா சுந்தரலிங்கம்
ஓ தமிழீழமே… -அபினயா
உன்னதபுருஷர்களாம் மாவீரர் நினைவெழுதி… -கவி-ரமீந்திராணி அருட்செல்வம்
மாவீரர் நினைவுக்கவி… -கவி -சுகன்யா குமரன்
உமக்காய் யாது செய்தோம்…… -அபிராமி
புறனானூற்று வீரர் தம் ஈகம்… கவி-பவானி மூர்த்தி
யார் இந்த மாவீரர்கள்… – ராகவி