முருகதாஸ் வீடு முற்றுகை?- உதவி இயக்குனர்கள் ஆலோசனை

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

1010004_671723676222127_1818789366_n

கத்தி படத்தின் கதையை மீஞ்சூர் கோபி என்ற ஒரு உதவி இயக்குனரிடமிருந்து மனசாட்சி இல்லாமல் சுட்டுவிட்ட ஏ.ஆர்.முருகதாசுக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் உ.இ க்கள்.

ஆங்காங்கே தனது கொடும்பாவி எரிக்கப்படாத குறையாக புகழ் டேமேஜ் ஆகிவருவதை கண்ணுற்ற முருகதாஸ், கடைசி நேரத்தில் ஒரு காரியம் செய்திருக்கிறார். தனது செலவில் உதவி இயக்குனர்களுக்காக ஒரு பிரத்யேக ‘கத்தி’ ஷோவை ஏற்பாடு செய்திருக்கிறார். அவர்களை மதிப்பதன் மூலம் கொதிப்பை இறக்கலாம் என்பது முருகதாஸ் திட்டம்.

படம் வெளியாகி பத்தாவது நாள் இந்த ஷோவை போடுறார்னா புரிஞ்சுக்க வேண்டியதுதான் என்று இப்பவே முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறது உதவி இயக்குனர்கள் வட்டாரம். ரமணா படத்திலிருந்தே அவரது கதை திருட்டு பற்றி கசமுசா இருந்து வருகிறது. வலைதளங்கள் வீரியம் பெற்றிருக்கிற இந்த காலத்தில் அது இன்னும் வேகமாக பரவ…. இந்த பேட் இமேஜிலிருந்து தப்பிப்பது எப்படி என்று முடிவு செய்ய முடியாமல் திணறி வருகிறார் முருகதாஸ்.

கோபிக்கு ஆதரவாக முருகதாஸ் வீட்டை முற்றுகையிடும் திட்டம் ஒன்றை ரகசியமாக செய்து வருகிறதாம் சில உதவி இயக்குனர்கள் வட்டம். நடக்கட்டும்… நடக்கட்டும்..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit